முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தை மாத பௌர்ணமி... திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்... 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

தை மாத பௌர்ணமி... திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்... 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

Tiruvannamalai | தை மாத பௌர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாது 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai, India

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் என்றாலே பெளர்ணமி கிரிவலம்தான். சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் வந்து அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் இங்கு வருகை தருவார்காள்.

அதுமட்டுமல்லாமல்திருக்கார்த்திகை தீபத் திருவிழா, பொங்கல் உற்சவம் என பல்வேறு விசேஷ நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் திருவண்ணாமலை நகருக்கு வருகை புரிந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வதோடு மட்டுமின்றி 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலத்தை மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம்.

தை மாத பௌர்ணமி நேற்று முன் தினம் 10.41 மணிக்கு தொடங்கி நேற்று இரவு 12.48மணி வரை பௌர்ணமி உள்ளதாக திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை தினம் தைப்பூசம்  என்பதால் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே  திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர்.

மேலும் கிரிவலப் பாதை முழுக்க பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு கிரிவலம் மேற்கொண்டனர். அப்போது  வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் 50 ரூபாய் டிக்கெட் பக்தர்களுக்காக விநியோகிக்கப்படுகிறது. அம்மணி அம்மன் கோபுரம் மற்றும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தவுடன் திருமஞ்சனம் கோபுரம் வழியாக கோவிலில் இருந்து வெளியே செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. .

இதற்காக ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். சுமார் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்..

மேலும் இலவச தரிசனத்திற்கான பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு கோயில் உள்ளே செல்லும் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியேற்றப்பட்டனர்.  குழந்தைகள் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் மலை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களை தரிசனம் செய்து கிரிவலம் வந்து வழிபட்டுச் சென்றனர்.

First published:

Tags: Thiruvannamalai