தை மாதப் பிறப்பில், தர்ப்பணம் செய்து நம் முன்னோர்களை வணங்கினால் நல்லது. உத்தராயன புண்ணியக் காலத்தின் தொடக்கமான தை மாதப் பிறப்பில் நாம் செய்யும் முன்னோர் வழிபாடு, நம் வாழ்வில் உள்ள தடைகளையெல்லாம் நீக்கும். பலவித நன்மைகளை செய்திடும். மேலும் எந்த வழிபாடு செய்தாலும் முன்னோர் வழிபாடு என்பதை தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களை வழிபட்டால்தான் நம் குடும்பமும் நம்முடைய சந்ததியும் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கை.
அப்படி முன்னோகளை வணங்காமல் விட்டால், அதனால் ஏற்படும் பித்ரு முதலான சாபங்களும் தோஷங்களும் நம் சந்ததியினர் மேல் வந்துவிழும். நாம் இருக்கும் வரை நமக்கு இருக்கிற மிக முக்கியக் கடமையாக, கடனாக பித்ரு வழிபாட்டைச் சொல்லி அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம்.
ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, புரட்டாசி மகாளயபட்ச காலத்தின் பதினைந்து நாட்கள், கிரகண காலங்கள் முதலான 96 தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும், முன்னோர்களின் பெயர்களையும் நம்முடைய கோத்திரத்தையும் சொல்லி மூன்று முறை எள்ளும் தண்ணீர் விடவேண்டும். எள்ளின் அளவு குறைவாகவும் தண்ணீர் அதிகமாகவும் விட்டு, தர்ப்பணம் செய்ய வேண்டும்.
Also see.. Pongal 2023 | தைப் பொங்கலும் சூரிய பகவான் வழிபாடும்..!
நாளை ஜனவரி 15ஆம் தேதி தை மாதம் பிறக்கிறது. மாதப் பிறப்பு நாளில் தர்ப்பணம் செய்து முன்னோரை வணங்கினால் சிறப்பு. வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, படையலிட்டு வணங்கி வழிபடுவது நம்மையும் நம் குலத்தையும் காக்கும்.
Also see... Pongal 2023: பொங்கல் திருநாளில் செய்ய வேண்டியவைகள்...!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal 2023, Pongal festival