ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தை அமாவாசைக்கு இந்த பாசி பருப்பு பாயாசம் செஞ்சு பாருங்க... ருசியாக இருக்கும்...!

தை அமாவாசைக்கு இந்த பாசி பருப்பு பாயாசம் செஞ்சு பாருங்க... ருசியாக இருக்கும்...!

பாசி பருப்பு பாயசம்

பாசி பருப்பு பாயசம்

Thai Amavasai 2023 | நாளை தை அமாவாசைக்கு இந்த பாசி பருப்பு பாயாசத்தை செய்து படையலை வைத்து வழிபாடு செய்யுங்கள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜவ்வரிசி பாயாசம், சேமியா பாயாசம் வழக்கமாக செய்யும் பாயாசம். ஆனால் பாசிப்பருப்பால் செய்யப்படும் இந்த பாயாசம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இதனை இந்த தை அமாவாசைக்கு நைவேத்தியமாக செய்து படைக்கலாம். அதுவும் பத்தே நிமிடத்தில் செய்து சாப்பிடலாம். இது உடல்நலத்திற்கும் நல்லது.

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு - ஒரு கப்

பச்சரிசி - கால் கப்

வெல்லம் - அரை கப்

நெய் - 2 ஸ்பூன்

முந்திரி திராட்சை - கால் கப்

செய்முறை

1. முதலில் பாசி பருப்பை கடாயில் வறுத்துக்கொள்ளவும். அதை குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும்.

2. பின்னர் சிறிது பச்சரிசியை கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

3. அப்போதே வெல்லத்தையும்  உருக்கிக் கொள்ளுங்கள்.

4. பாசி பருப்பு வெந்ததும் அதில் பச்சரிசி தண்ணீரை ஊற்றி கிளறவும். உருக்கிய வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். இந்த 2 கலவையையும் கெட்டியான பதம் வரும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

5. இறுதியாக நெய் விட்டு அதில் முந்திரி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அது நன்றாக பொரிந்து வந்ததும்  பாயாசத்தில் ஊற்றிக் கிளறவும். பாசி பருப்பு பாயாசம் ரெடி.

குறிப்பு: தேவைப்பட்டால் காய்ச்சிய பாலை ஊற்றிக்கொள்ளலாம். நல்ல ருசியாக இருகும்.

First published:

Tags: Food, Payasam, Sweets, Thai Amavasai