Home /News /spiritual /

thai Amavasai 2022 | அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?

thai Amavasai 2022 | அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?

அமாவாசை தர்பணம் செய்தல்

அமாவாசை தர்பணம் செய்தல்

Amavasai 2022 | அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்? தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது.

மேலும் படிக்கவும் ...
    நாம் எந்த வழிபாட்டை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் முன்னோர் வழிபாட்டை மட்டும் ஒருபோதும் செய்யாமல் இருக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். அமாவாசை நாளில், விரதம் மேற்கொண்டு, படையலிட்டு இலையில் சாப்பிட வேண்டும். காகத்துக்கு உணவு வைத்த பின்னரே நாம் சாப்பிட வேண்டும். அமாவாசை நாளில், நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும் என்பது நம்பிக்கை. அவர்களுக்குச் சேரும் புண்ணியம் யாவும் நமக்கும் வந்துசேரும். நமக்கு மட்டுமின்றி, நம் சந்ததிக்கும் வந்துசேரும் என்பது ஐதீகம். 

    அப்படி இந்த கடமையில் தவறி முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிட்டால் கடவுள் கூட நம்மை காப்பாற்ற முடியாதாம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.  இந்த அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும். இதில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  அந்தவகையில் நாளை தை அமாவாசை ஆகும். இந்த நாளில் யார் அமாவாசை விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

    பொதுவாக நம் வீட்டில் உள்ள இறந்து போன முன்னோர்களை நினைத்து விரதம் இருக்க  வேண்டும். தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

    திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது. அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது. அதாவது சுமங்கலி பெண்கள் இந்த விரதம் இருக்கக்கூடாது.

    பெண்ணிற்கு சகோதர்கள் இருப்பின் அவர்கள் பெண்ணின் பெற்றோருக்குவிரதம் இருந்து தர்ப்பணம் கொடுப்பார்.  அப்பா இல்லை என்றால் அம்மா விரதம் இருந்து தர்ப்பணம் கொடுப்பார்.

    தை அமாவாசை


    Thai Amavasai 2022 | அமாவாசை தினத்தில் காக்காவுக்கு சோறு வைப்பது ஏன்?

    அம்மா இல்லை என்றால் அப்பா விரதம் இருந்து தர்ப்பணம் கொடுப்பார். அப்படி சகோதர் இல்லை, பெற்றோர் இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்கு சென்று தானம் கொடுக்கலாம், வீட்டிற்கு வந்து நான்கு பேருக்கு இலையில் சோறு போட்டு உணவளிக்கலாமே தவிர அமாவாசை விரதத்தை சுமங்கலி பெண் ஒருவர் கடைப்பிக்கக் கூடாது. முக்கியமாக விரதப் படையலாக, மாமனார், மாமியாருக்காகச் சமைக்கும் உணவை வெறும் வயிற்றுடன் சமைக்கக்கூடாது என்றும் காலை உணவை எடுத்துக் கொண்ட பிறகுதான் சமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... அமாவாசை அன்று வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்... ஏன் தெரியுமா?

    தை அமாவாசை ஸ்பெஷல்: வெள்ளை பூசணிக்காய் சாம்பார் வைக்க ரெசிபி

    ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அமாவாசை அன்று உபவாசம் இருக்க வேண்டும். கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். ஆனால் ஒருபோதும் சுமங்கலி பெண்கள் எள்ளும் தண்ணீரும் இரைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    மேலும் படிக்க... Thai Amavasai 2022 : தை அமாவாசைக்கு படையல் செய்வது எப்படி?

    Thai Amavasai 2022 : தை அமாவாசை எப்போது? தேதி நேரம் குறித்த தகவல்கள்   

    Thai Amavasai 2022 : தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய 3 மிக முக்கிய விசயங்கள் என்னென்ன?

    அதேபோல அமாவாசையில் கோயிலுக்கு சென்று  தீபம் ஏற்றி வழிபடலாம். முடிந்தவரை யாருக்காவது உணவு தானம் செய்தால் நல்லது  அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Thai Amavasai

    அடுத்த செய்தி