ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவியும் தமிழக மக்கள்...

தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவியும் தமிழக மக்கள்...

தை அமாவாசை

தை அமாவாசை

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 500 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளிலும் கோயில்களிலும் குவிந்து வருகின்றனர்.

ராமேஸ்வரம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் ராமேஸ்வரம் திருக்கோவிலில் அக்னி தீர்த்த கடலில் தீர்த்தம் குளிக்கவும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் மற்றும் சாமி தரிசனம் செய்யவும் தடை செய்ய்யப்பட்டு வந்தது.

ஆனால் இந்த ஆண்டு நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் இரண்டாவது பெரிய தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கரையில் தீர்த்தமும் மற்றும் 22 தீர்த்தத்தை தீர்த்தமாட சுவாமி தரிசனம் செய்ய அரசு தடையை நீக்கியது. அடுத்து இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் முன்புள்ள அக்னி தீர்த்த கடலில் தீர்த்தமாடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க... Thai Amavasai 2022 | தை அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க, படையல் வைக்க, பிண்டம் வைத்து வழிபட எது நல்ல நேரம்? என்பது குறித்த தகவல்கள்…

மேலும் இந்த தை அமாவாசையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட வெளியூரைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதாக பக்தர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

கோவை 

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் நொய்யல் ஆற்றுப் பகுதியில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய 500 மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். முக கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து பக்தர்கள் நொய்யல் ஆற்றில் இறங்கி இலையில் தீபம் வைத்து மூதாதையர்களுக்கு வழிபாடு செய்து வருகின்றனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றங்கரையோரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

குற்றாலம்

தை அமாவாசை தினமான இன்று தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய மெயின் அருவிக்கரையில் குவிந்தனர். தர்ப்பணம் செய்து கொடுக்க ஏராளமான வேத விற்பன்னர்களும் அங்கு குவிந்திருந்தனர். பின்னர் அருவியில் புனித நீராடி தங்கள் மூதாதையர்களை நினைத்து வழிபட்டு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அருவியில் குளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

சென்னை

தை அம்மாவாசை தினத்தையொட்டி ஏராளமானோர் மெரினா கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மெரினாவில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கலங்கரை விளக்கம் பட்டினப்பாக்கம் பகுதியில் திதி கொடுத்து வருகின்றனர்.

First published:

Tags: Rameshwaram, Thai Amavasai