ஆடி அமாவாசைக்கு பிறகு இந்த ஆண்டு முதல் பெரிய அமாவாசையான தை அமாவாசை இன்று நிகழ்கிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி ,தர்ப்பணம், திலோகோமம் கொடுத்து ராமநாதசுவாமி திருக்கோயில் முன்பு அமைந்துள்ள அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித தீர்த்தம் ஆடி வந்தால் சிறப்பாக இருக்கும். அதனால் வருடா வருடாம் தை அமாவாசை அன்று ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். வழித் தடங்கள் மாற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத வண்ணம் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து வருகிறது. மேலும் ராமேஸ்வரம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also see... தை அமாவாசைக்கு பூஜை செய்ய நல்ல நேரம் எது?
அதேபோன்று சேதுக்கரை, தேவிபட்டினம், பிரப்பனவலசை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: வீரக்குமரன், ராமேஸ்வரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ramanathapuram, Rameshwaram, Thai Amavasai