தை அமாவாசை இன்று பிற்பகல் 1.59 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி 12.02 வரை உள்ளது. அதனால் ஜனவரி 31ஆம் தேதியான இன்று முழுவதும் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம்.
தை அமாவாசை என்றால் என்ன?
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் ஆடி - புரட்டாசி - தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பிதுருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளாய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பிதுருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.
தை அமாவாசை தர்ப்பணம் எங்கெல்லாம் கொடுக்கலாம்?
பொதுவாக ஓவ்வொரு அமாவாசை தினங்களிலும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அப்படி தர்ப்பணம் கொடுப்பவர்கள் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுப்பது மிகவும் விசேஷமானது. பொதுவாக தர்ப்பணம், சிரார்த்தம் என இரண்டு உண்டு. இதில் வித்தியாசமும் உண்டு.
மேலும் படிக்க... அமாவாசை அன்று வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்... ஏன் தெரியுமா?
தை அமாவாசை ஸ்பெஷல்: வெள்ளை பூசணிக்காய் சாம்பார் வைக்க ரெசிபி
மேலும் படிக்க... காகத்திற்கு உணவு வைப்பதன் காரணம் தெரியுமா?
தர்ப்பணம் என்றால் என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.
சிரார்த்தம்:
ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோயிலில் சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறந்தது. குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.
மேலும் படிக்க... Thai Amavasai 2022 : தை அமாவாசைக்கு படையல் செய்வது எப்படி?
Thai Amavasai 2022 : தை அமாவாசை எப்போது? தேதி நேரம் குறித்த தகவல்கள்
Thai Amavasai 2022 : தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய 3 மிக முக்கிய விசயங்கள் என்னென்ன?
யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஜனவரி 31 அன்று தர்ப்பணம் கொடுக்க நல்ல நேரம்:
காலை 09.00 - 10.30
மதியம் 12.00 - 01.30
பிண்டம் வைத்து வழிபட நல்ல நேரம்:
மதியம் 12.00 - 01.30
படையல் வைக்க நல்ல நேரம்:
மதியம் 12.00 - 01.30
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thai Amavasai