தை அமாவாசையை முன்னிட்டு இன்று 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து கடலில் தர்பணம் கொடுத்து புனித நீராடினர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் நீர் நிலைகளுக்கு சென்று தங்கள் முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராடுவது இந்துகள் பெரும்பாலானோர் பின்பற்றி வருகின்றனர். இது ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் லட்சுமி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் தங்கள் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து புனித நீராடுவதற்காக குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் இன்று அதிகாலையிலே கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர்.
இங்குள்ள வேத விற்பனர்களிடம் எள், பச்சரிசி, தர்ப்பை, பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள். இது போன்று இந்த நாட்களில் செய்வதால் தங்கள் முன்னோர்களால் சகல ஐஸ்வரியமும் கிடைப்பதாக தர்ப்பணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.
முக்கடல் சங்கமத்தில் புனித நீராடியவர்கள் பின்னர் இங்குள்ள பரசுராம விநாயகர், பகவதி அம்மன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தனர். இதனால் குமரி கடற்கரை பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanniyakumari, Thai Amavasai