ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தை அமாவாசை தினம்.. விரதம் முடிந்து காகத்திற்கு சோறு வைப்பது ஏன் தெரியுமா?

தை அமாவாசை தினம்.. விரதம் முடிந்து காகத்திற்கு சோறு வைப்பது ஏன் தெரியுமா?

காகம்

காகம்

Thai amavasai 2023 | காகத்தின் உருவில், நம் முன்னோர்கள் வந்து உணவருந்துவதாக ஒரு நம்பிக்கை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மற்ற ஜீவராசிகளை விட்டு காகத்திற்கு முக்கியமாக அமாவாசை தினத்தில் உணவளிப்பது ஏன்? அதிலும் முக்கியமாக தை அமாவாசையில் படையல் வைத்து உணவு அளிப்பது ஏன் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். தினமும் உணவு சமைத்ததும் அதில் சிறிதளவை எடுத்து காகத்திற்கு வைத்துவிட்டு, அதன்பின் உணவருந்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். குறைந்த பட்சம், அமாவாசை தினத்திலாவது, காகத்திற்கு சாதம் வைத்தபிறகு உணவருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. காகத்தின் உருவில், நம் முன்னோர்கள் வந்து உணவருந்துவதாக ஒரு நம்பிக்கை. அந்த வகையில்தான் நாம் காகத்திற்கு உணவு படைக்கிறோம். அப்போது, அணில், குருவி போன்ற மற்ற உயிரினங்களும் உணவை பங்கிட்டுக்கொள்ளும்.

எந்த உயிர்கள் உணவருந்தினாலும் புண்ணியம் கிடைக்கும்.  இயலாதவர்களாக இருக்கும் மனிதர்களுக்கும் கூட நாம் அன்னத்தை அளித்தால், அது பெரும் புண்ணியம்தான் அதனால் அமாவாசையில் அன்னதானம் அளியுங்கள். அதனால் தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடும்போது உங்கள் கர்ம வினைகள் கரைவதாக ஐதீகம். அதுமட்டுமல்லாமல் அமாவாசையிலும் வைப்பது மிகவும் சிறப்பு. மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து அமாவாசை நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு உகந்த நேரம் மதிய வேளை. அதேபோல இந்நாளில் தர்ப்பணம் செய்வதும் சிறப்பு என்று சாஸ்திரம் கூறுகிறது.

அமாவாசையில் நம் முன்னோர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நம் வீட்டிற்கு வரும் முன்னோர்களுக்கு உணவு கொடுப்பது போல நம்முடைய வீட்டு வாசலுக்கு வரும் காகங்களுக்கு உணவு கொடுப்பதனால் எமன் மகிழ்ச்சியடைவாராம். அதனால் முன்னோர்களின் ஆசியும் கிடைக்குமாம். அதுமட்டுமல்லாமல் முன்னோர்களுக்கு நாம் படைக்கும் உணவை முன்னோர்களின் வடிவில் காகங்கள்தான் உண்ணும் என்பது நம்பிக்கை. அதனால் காகங்களின் வடிவில் வரும் முன்னோர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவினை சமைத்து விரதம் இருந்து படையல் வைப்பதின் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடுமாம்.

Also see... Thai Amavasai 2023 | தை அமாவாசை எப்போது? பூஜை செய்ய நல்ல நேரம் எது?

மேலும் சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திபடுத்தியதாகவும் ஜோதிடர்கள் கருதுகிறார்கள்.

மேலும் தை அமாவாசை தினமான நாளை காகத்திற்கு பலரும் உணவு வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். அப்படி காகங்கள் சாதத்தை எடுத்துக்கொண்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை. முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உணவு அளிப்பதற்கு காரணம் இதுதான்.

Also see... தை அமாவாசை வருது.. பூஜை சாமான்கள் புதுசுபோல பளபளக்கணுமா? சிம்பிளான சில டிப்ஸ்!

மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் பித்ரு பூஜை செய்து காகத்திற்கு உணவு வைக்கும் பொழுது நாம் குளித்து விட்டு தான் செய்ய வேண்டும்.

First published:

Tags: Thai Amavasai