முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தை அமாவாசை நாளில் வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்... ஏன் தெரியுமா?

தை அமாவாசை நாளில் வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்... ஏன் தெரியுமா?

வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் வறுவல்

Thai Amavasai 2023 | அமாவாசை அன்று வீட்டில் சமைக்கும் உணவுகளில் வாழைக்காயை தவறாமல் சமைப்பார்கள் அது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

  • Last Updated :
  • Tamil Nadu, India

அமாவாசை அன்று சமைக்கும் உணவை படையல் வைத்து நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் விதமாக காக்கைக்கு வைத்து வருகின்றோம். எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு ஆகிய மூன்று உணவுப் பொருட்களுமே இருக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது வாழைக்காய்தான். ஏனெனில் முன்னோர்களின் அருளால் நம் குலமும், சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காக வாழைக்காயை தவறாமல் சமைக்கின்றார்கள். சுவையான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்

வாழைக்காய் 4

உப்பு

மஞ்சள் பொடி

கருவேப்பிலை

கடுகு

உளுத்தம் பருப்பு

தேங்காய் எண்ணெய் 4 டீஸ்பூன்

பொடி செய்ய:

மல்லி விதை 3 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 5

கடலை பருப்பு 2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் 3 டீஸ்பூன்

பெருங்காய கட்டி சிறு துண்டு

எண்ணெய் 2 டீஸ்பூன்

அமாவாசை வாழைக்காய் கறி செய்முறை

1. ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பெருங்காயம், மல்லி விதை, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் சிவக்க வறுத்து , கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும். இந்த கலவை ஆறியவுடன் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

2. வாழைக்காயை தோல் நீக்கி கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வாழைக்காயை போடவும்.

3. வெந்தவுடன் நீரை வடிகட்டி கொட்டவும். அடி கணமான வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

4. அத்துடன் வெந்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.

top videos

    சிறிதாக அடுப்பை எரிய விட்டு 10 நிமிடம் வதங்கிய பின் பொடித்து வைத்துள்ளவற்றை சேர்த்து கலக்கவும். 3 அல்லது 4 நிமிடம் வதங்கிய பின் அடுப்பை அணைக்கவும். அமாவாசை வாழைக்காய் கறி ரெடி.

    First published:

    Tags: Food, Thai Amavasai