ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தை அமாவாசைக்கு கண்டிப்பாக வைக்க வேண்டிய பூசணி சாம்பார்.. இதோ ரெசிபி..!

தை அமாவாசைக்கு கண்டிப்பாக வைக்க வேண்டிய பூசணி சாம்பார்.. இதோ ரெசிபி..!

தை அமாவாசை சாம்பார்

தை அமாவாசை சாம்பார்

Thai amavasai sambar | அமாவாசை என்றாலே பூசணிக்காயிதான் சாம்பார் வைப்பார்கள். அதிலும் தை அமாவாசை என்றால் கண்டிப்பாக வெள்ளை பூசணியில்தான் சாம்பார் வைப்பார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தை மாதத்தில் பூமி உஷ்ணத்தை தொடங்குகிறது. ஏனென்றால் சூரியன் வடக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் கோடை காலம் நெருங்கி வரயுள்ள நிலையில், உடலில் நீச்சத்துக்களின் அளவை அதிகரிக்க வேண்டியுள்ளது. அப்படி உடலின் நீச்சத்துக்கள் மற்றும் இதர சத்துக்களின் அளவை அதிகரிக்க, வெள்ளை பூசணிக்காயை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.  அதனால்தான் தை மாதத்தில் வரும் அமாவாசையில் பூசணிக்காயை வைத்து சாம்பார் செய்து படையல் வைப்பதாக நம்பப்படுகிறது. இங்கு அந்த வெள்ளை பூசணிக்காயைக் கொண்டு எப்படி சாம்பார் வைக்கலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்...

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்

தண்ணீர் - 2 கப்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

வெள்ளை பூசணி - 1 கப்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

வரமிளகாய் - 2

வெங்காயம் - 1

தக்காளி - 1

சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

2. பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, பருப்பை மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.

3. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

4. பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கியதும், வெள்ளை பூசணியை சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

5. பின்பு அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மசித்து வைத்துள்ள பருப்பு, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக 5-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், வெள்ளை பூசணி சாம்பார் ரெடி.

First published:

Tags: Food, Sambar Recipe, Thai Amavasai