Home /News /spiritual /

Thai Amavasai 2022 : தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய 3 மிக முக்கிய விசயங்கள் என்னென்ன?

Thai Amavasai 2022 : தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய 3 மிக முக்கிய விசயங்கள் என்னென்ன?

அமாவாசை

அமாவாசை

Thai Amavasai 2022 : இந்த வருடம் தை அமாவாசை என்றைக்கு கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றியும் முன்னோர்காளுக்கு பெண்கள் தர்பணம் கொடுக்கலாமா என்பது பற்றியும் விளக்குகிறார் ஆத்ம ஞான மையம் மங்கையர்க்கரசி.

அமாவாசை அன்று செய்ய வேண்டி 3 முக்கிய விஷயங்கள் பற்றி ஆன்மிகவாதியான தேச மங்கையர்கரசி கூறுகிறார். தை அமாவாசை என்பது இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர்.

ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன. தை அமாவாசை அன்று, ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து திதி செய்வர்.

ஆனால் இந்த ஆண்டு 2 நாட்காளுக்கு அமாவாசை திதி இருப்பதால் என்றைக்கு படையல் வைப்பது என்பதில் சிரிய குழப்பம் எழுந்துள்ளது. அதனால் என்றைக்கு நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். அதற்கான காரணம் என்ன? ஏன்?  என்பதை பற்றியும் தேச மங்கையர்கரசி விளக்குகிறார்.



அதாவது, தை அமாவாசை என்பது முன்னோர்களுக்காக இருக்கும் விரதமாகும். இந்த வருடம் தை அமாவாசை ஜனவரி 31 ஆம் தேதியும் பிப்ரவரி 1ஆம் தேதியும் வருகிறது. அதனால் என்றைக்கு நம் முன்னோர்களுக்கு படையல் வைக்க வேண்டும் என்றால், ஜனவரி 31ஆம் தேதிதான் படையல் வைத்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்கிறார். பொதுவாக சூரியன் உதயமாகும் நேரம் மற்றும் அஷ்தமனமாகும் நேரம் என்று ஒன்று உள்ளது. இந்த நேரத்தை 5 காலமாக பிரிக்கலாம்.

முதலாவது காலம் பிராத காலம், இதனைதான் அதிகாலை பொழுது என்று சொல்லுகிறோம், அதன் பிறகு சங்கம காலம், மூன்றாவதாக வரக்கூடியது மத்திய காலம், நான்காவதாக வரக்கூடியது அபரானக்காலம், ஐந்தாவதாக வரக்கூடியது சாய்ங்கால காலம் ஆகும்.

இதில் ஸ்ரார்தம், திதி, முன்னோர்களுக்கு கொடுக்கக்கூடிய தர்பணம் ஆகியவை செய்யக்கூடிய காலம் எதுவென்றால் அபரானக்காலம் என்று வகுக்கப்பட்டுள்ளது. அந்த குறிபிட்ட திதியானது அபரானக்காலத்தில் இருந்தால் மட்டுமே நாம் aந்த நாளில் தர்பணம் கொடுக்கக்க வேண்டும். அப்படிக் கொடுக்கக்கூடிய தர்பணத்திற்குதான் வலிமை உண்டு. அதனால் இந்த 5 காலத்தில் அபரானக்காலத்தில் அமாவாசை திதி அமைந்திருக்க வேண்டும் என்பது நியதி.

அந்த வகையில் ஜனவரி 31ஆம் தேதிதான் நமக்கு அமாவாசை அமைந்துள்ளது. அடுத்த நாள் அபரானக்காலத்தில் திதி அமையவில்லை ஆகவேதான் இந்த வருடம் தை அமாவாசையை குழப்பம் இல்லாமல் ஜனவரி 31ஆம் தேதியில் அனுஷ்டிக்கலாம் என்று மங்கையர்கரசி கூறுகிறார்.



அமாவாசைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்

முதல் நாளே வீட்டை கழுவி மொழுகி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அடுத்தநாள் காலையில் யார் தர்பணம் கொடுக்கபோகிறாரோ அவர் குளித்துவிட்டு அன்றைக்கு முழுவதும் விரதம் இருந்து காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அளிக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் உணவை யாராவது 2 பேருக்கு தானமாக அளித்தல் நல்லது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், சில காரணங்களுக்காக தர்பணம் கொடுக்க முடியாதவர்கள் யாருகாவது உணவை தானமாக கொடுப்பது சிறப்பு.

பெண்கள் தர்பணம் செய்யலாம்

தர்பணம் செய்வது ஆண்கள்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பெண்களும் செய்யலாம் என்கிறார் மங்கையர்கரசி. ஆனால் சுமங்கலி பெண்கள் தர்பணம் கொடுக்கும் போது எள்ளையும்  தண்ணீரையும் மட்டும் இரைக்கூடாது. ஆனால் கணவனை இழந்த பெண்கள் எள்ளும் தண்ணிரையும் வைத்து தர்பணம் செய்யலாம். அது தவிர மாதவிலக்கின்போதும் படையல் செய்து வழிபலாம் தவறில்லை.

மாலையில் விளகேற்றுதல் நல்லது

அமாவாசை அன்று மாலையில் தவறாமல் விளக்கேற்றுவது நல்லது. அப்படி விளகேற்றும் போது நாராயணனை வணங்கி என் முன்னோர்கள் இருள் என்பது இன்றி ஒளி வெல்லத்தில் திளைக்க வேண்டும். அவர்கள அடுத்த பிறவி எடுத்தால் அந்த பிறவி அவர்களுக்கு நல்ல பிறவியாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பலன்கள்

அமாவாசை விரதத்தை இப்படி கடைபிடித்தால் குடும்பத்தில் பிரச்னைகள் வராது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் எநடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முன்னோர்களின் அருளோடு இறை அருளும் நமக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க... Thai Amavasai 2022 : தை அமாவாசை எப்போது? தேதி நேரம் குறித்த தகவல்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Thai Amavasai

அடுத்த செய்தி