திருச்சி மாநகரின் தென்னூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற உக்கிரமாகாளியம்மன் ஆலயத்தின் ஆண்டு தேர் திருவிழா கடந்த 23ஆம்தேதி காப்புக்கட்டுதல் மற்றும் அம்மன் குடியமர்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் தொடர்ச்சியாக நேற்றிரவு காளியாட்டம் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான குட்டிக்குடி திருவிழா நடைபெற்றது.
தென்னூர் மந்தையில் வண்ணப் பூக்களால், ஓலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலைத் தேரில் உக்கிரமாகாளி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, கருப்பண்ணசாமி மற்றும் உக்கிரமாகாளியம்மன் அருள்பெற்று மருளாளி சிவக்குமார் பக்தர்களால் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கிய 300க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை குடித்து பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பலியிடப்பட்ட ஆடுகளைக் கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றனர். விழாவையொட்டி மாநகர போலீசாரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.