உடல் நலத்தை காத்து, உயிர் வளம் தரும் எமதர்மனின் கோவில்கள்.. 

திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோவிலில் உள்ள எமதர்மன் சன்னிதி

ஆயுள் விருத்தியாகவும், நோய் நொடிகள் மற்றும் மரண பயம் விலகவும் எமதர்மன் கோவில் கொண்டுள்ள தலங்களுக்கு பலரும் சென்று வழிபாடுகளை செய்வது வழக்கம்.

  • Share this:
மரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு ‘தர்மராஜன்’ என்றும் பெயரும், காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் ‘காலன்’ என்ற பெயரும் உண்டு. ஆயுள் விருத்தியாகவும், நோய் நொடிகள் மற்றும் மரண பயம் விலகவும் எமதர்மன் கோவில் கொண்டுள்ள தலங்களுக்கு பலரும் சென்று வழிபாடுகளை செய்வது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எமதர்மன் கோவில்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

1. திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோவிலில் எமதர்மன் சன்னிதி அமைந்துள்ளது. பத்தடி ஆழத்தில் உள்ள இந்தக் கோவிலில், சிவபெருமானின் காலடியில் குழந்தை வடிவில், எமதர்மன் உள்ளார்.

2. கோயம்புத்தூரில் இருந்து காரமடை வழியாக சத்தியமங்கலம் செல்லும் பாதையில் உள்ள சிறுமுகையில் எமனுக்கு கோவில் இருக்கிறது. சக்தி வாய்ந்த கோவிலாக கருத்தப்படுகிறது. இந்த கோவிலில் பவுர்ணமி நாளன்று தரிசனம் செய்தால், ஆயுள் தோஷம் விலகுவதாக ஐதீகம். எந்த நோயாக இருந்தாலும் வேண்டிய ஒரு மாத காலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதன் பின்னணியில் இத்தலத்து எமன், விநாயகருக்கு செய்து கொடுத்த சத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.

3. தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் என்ற ஊரிலும் எமதர்மனுக்கு கோவில் இருக்கிறது. இது ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்டதாகும். இந்தக் கோவிலின் மூலவரான எமதர்மருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்தல் என்பது நேர்த்திக்கடனாக உள்ளது. கோவிலில் உள்ள எமன், முறுக்கிய மீசையுடன், எருமை மீது அமர்ந்து, நீல வண்ண வஸ்திரம் அணிந்து, கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி, கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறார்.இந்தக் கோவிலில் வழிபடுபவர் களுக்கு ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் எமகண்ட நேரங்களில் இந்தக் கோவிலில் ஆயுள்விருத்தி ஹோமம் நடத்தப்படுகிறது.

திருப்பைஞ்சீலி


4. மயிலாடுதுறை அருகே நன்னிலம் - குடவாசல் சாலையில் உள்ளது, ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சி நாதர் கோவில். இங்கு எமதர்மராஜனுக்கு தனிச்சன்னிதி உள்ளது. இத்தலத்தில் இறப்பவர்களுக்கு மரண வேதனை இல்லை என்பது ஐதீகம். இத்தலத்து வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி, எமனை வழிபட்ட பிறகே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். இப்பகுதியில் இறப்பு மற்றும் கிரகணம் போன்ற காரணங்களுக்காக கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள தலங்களில் திருக்கடவூருக்கு அடுத்தபடியாக பெருமை பெற்ற தலம் ஸ்ரீவாஞ்சியம்.

5.கோவையிலேயே மற்றொரு சித்ரகுப்த எமதர்மராஜன் கோவிலும் உள்ளது. இந்தக் கோவில் சிங்காநல்லூர்- வெள்ளலூர் பாதையில் அமைந்துள்ளது. கருவறையில் எமதர்மன் எருமையின் மீது அமர்ந்தபடியும், அவருக்கு அருகில் சித்ரகுப்தன் நின்றபடியும் சிலை வடிவம் இருக்கிறது.

மேலும்படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

6. புதுச்சேரியில் உள்ள பிரத்யங்கிரா கோவிலில் எமதர்மனுக்கு வடதிசை நோக்கிய சன்னிதி அமைந்துள்ளது. எருமை வாகனத்தில் அமர்ந்துள்ள எமனின் கைகளில் சூலாயுதம் மற்றும் கதை உள்ளன. இந்த தலத்தில் எமதர்மன் யோக நிலையில் இருப்பதாக ஐதீகம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: