முகப்பு /செய்தி /ஆன்மிகம் / பிள்ளையாரின் பெருமைகள், திருதலங்கள் , புராணங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்...

பிள்ளையாரின் பெருமைகள், திருதலங்கள் , புராணங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்...

பிள்ளையார்

பிள்ளையார்

எல்லா தெய்வங்களும் இந்தப் பிள்ளையாருக்குள் அடக்கம். இவரை வணங்காமல் எந்தப் பூஜையும், மகா ஹோமங்களும் கூட முற்றுப் பெறாது என்பதும் கூட யாவரும் அறிந்ததே. வாருங்கள், இந்த முழுமுதற் கடவுளின் திருத்தலங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம் உயிரோடு கலந்து  உறவாடும் தெய்வம் பிள்ளையார்.

‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ என்பதும் ‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே’ என்பதும் நமது ஊர்களில் பழகி வரும் மொழிகள்..

பிள்ளையார்

எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று நமது காரியங்கள் அனைத்தும் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு பிள்ளையாருக்கு உண்டு. உலகத்தில் பல நாடுகளில் பிள்ளையார் வழிபாடு காணப்படுகிறது. அந்த வகையில் நமது புராணங்களில் பிள்ளையாரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்  பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க... திருநீறு அணிந்து கொள்ளும் முறைகள்!

பிள்ளையாரின் பெருமைகள் கூறும் புராணங்கள்

1. பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது தங்களுடைய ஆயுதங்களை வன்னி மரத்தடியில் ஒளித்து வைத்ததாகவும், அதனை விநாயகப் பெருமான் பத்திரமாக காத்ததாகவும் சொல்லபடுகிறது.

2. வியாசருக்கு பிள்ளையாரே மகாபாரத காவியம் எழுத துணை நின்றார். அவரே அதனை எழுதவும் செய்தார்.

3. அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் அடைத்த போது. அதனை மீண்டும் இப்பூவியில் பிரவாகிக்க பிள்ளையார் காக்கை ரூபம் எடுத்து வந்ததாக புராணத்தில் உள்ளது.

4. முருகப்பெருமான் வள்ளியை மணக்க, யானை ரூபம் எடுத்து விநாயகப் பெருமான் துணை நின்றார் என்று கூறப்படுகிறது.

5. தேவர்கள் துயர் துடைக்க விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார். இது குறித்த புராணக் கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.

6. விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர்.

7. புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.

தடைகள் மற்றும் இடையூறுகளை நீக்குவதால் இவரை விக்னேஷ்வரர் என்று எல்லோரும் அழைக்கின்றனர். எனவே தான் எந்த காரியத்தையும் தொடங்கும் முன்னால் பிள்ளையார் சுழி போடுவது வழக்கமாக உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. எல்லா தெய்வங்களும் இந்தப் பிள்ளையாருக்குள் அடக்கம். இவரை வணங்காமல் எந்தப் பூஜையும், மகா ஹோமங்களும் கூட முற்றுப் பெறாது என்பதும் கூட யாவரும் அறிந்ததே. வாருங்கள், இந்த முழுமுதற் கடவுளின் திருத்தலங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க... கண்ணனுக்கு ஏன் வெண்ணெய் படைக்கப்படுகிறது?

பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்...

1. மயிலாடுதுறை- திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்!

2. ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும்.

3. மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள்கிறார் பஞ்சவிருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவர்கள் அருவமாக தவம் செய்வதாக ஐதீகம்!

4. தாமரை மலரில் அமர்ந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.

5. கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரம் மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

6. சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை, வலஞ்சை விநாயகர் என்கின்றனர்.

7. நவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை, வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் தரிசிக்கலாம்.

8. அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.

9. ஐங்கரனான விநாயகர் மூன்றுகரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர். சகஸ்ரநாம அர்ச்சனைக்காக, தினமும் 108 மோதகம் படைப்பதும் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.

10. திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஓலமிட்ட விநாயகர். நள்ளிரவில் ஓலமிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டிருப்பதை ஊர்மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம்! இதே தலத்தில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியின் மீது அமர்ந்தருளும் ஆவுடைப்பிள்ளையாரை தரிசிக்கலாம்.

மேலும் படிக்க... எளிய பரிகாரங்களும் ,மிக பெரிய பலன்களும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Temple