Home /News /spiritual /

தெலுங்கு அனுமன் ஜெயந்தி 2022: தசமி திதியில் கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம்!

தெலுங்கு அனுமன் ஜெயந்தி 2022: தசமி திதியில் கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம்!

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்

Telugu Hanuman Jayanti 2022 | தெலுங்கு அனுமன் ஜெயந்தியின் சிறப்பம்சங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

ஆஞ்சநேயர்க்கு ஹனுமான், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், பஜ்ரங்க்பலி, மாருதி என்று பல பெயர்கள் உள்ளன. ஸ்ரீ ராமருடைய பிரதான பக்தராகவும், வலிமை, மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவராகவும் ஹனுமான் அறியப்படுகிறார். இவரை பற்றி புராணங்களில் பல கதைகள் கூறப்படுகின்றன. ஆஞ்சநேயரின் பிறந்த தினத்தை அனுமன் ஜெயந்தி என்று உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அனுமன் ஜெயந்தி அல்லது ஆஞ்சநேயர் ஜெயந்தியை வெவ்வேறு தினங்களில் கொண்டாடுகிறார்கள்.

அது மட்டுமின்றி சாகா வரம் பெற்ற சிரஞ்சீவியாக, பூமியில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நம்பப்படுகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தெலுங்கு ஹனுமான் ஜெயந்தியை சித்திரை-வைகாசி மாதத்தில் வரும் தசமி திதியில் கொண்டாடுகிறார்கள். இந்த அனுமன் ஜெயந்தி பற்றிய சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

ஆந்திர மாநிலங்களான, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இந்த அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. பொதுவாக இதைப் போன்ற கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி, நரசிம்மர் ஜெயந்தி அல்லது விநாயக சதுர்த்தி ஆகிய கொண்டாட்டம், ஒரு நாள் தான் நடைபெறும். நவராத்திரி ஒன்பது நாட்கள் அல்லது 10 நாட்கள் நடைபெறும்.

ஆனால் தெலுங்கு மொழி பேசும் மக்களின் பூர்வீகமான ஆந்திர மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி 41 நாட்களுக்கு அனுசரிக்கப்படுகிறது. இது சித்திரை மாதம் பௌர்ணமியன்று தொடங்கி, அதாவது சித்ரா பவுர்ணமி அன்று தொடங்கி, வைகாசி மாதத்தின் தேய்பிறை தசமி திதி வரை, பத்தாவது நாள் வரை நடைபெறும். இந்த ஆண்டு தெலுங்கு அனுமன் ஜெயந்தி மே 25ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி 2022 முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் :

தெலுங்கு அனுமன் ஜெயந்தியின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம். சூரியபுத்திரன் அதாவது சூரியன் மற்றும் அஞ்சனா தேவிக்கு மகனாக பிறந்த ஆஞ்சநேயர் குழந்தை பருவத்திலேயே தன்னுடைய குறும்புத்தனத்தால் உலகின் ஒளியையே மறைக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்தார். அது மட்டுமின்றி, இவர் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்து அபரிமிதமான அறிவை பெற்றவர்; உடல் வலிமை மட்டும் அல்ல இவர் கல்வி அறிவிலும் மிகச்சிறந்து விளங்கியவர் என்று புராணக் கதைகள் கூறுகின்றன.

ராமாயணத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஆஞ்சநேயரும் ஒருவர். குறிப்பாக ஆஞ்சநேயர் இல்லை என்றால் சஞ்சீவினி மூலிகையை மலையை பெயர்த்து லட்சுமணனின் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்! ஸ்ரீ ராமரிடம் தீவிரமான பக்தியும் விசுவாசமும் கொண்டுள்ளவர். உண்மைக்கும் நேர்மைக்கும் எப்போதும் தலை வணங்குவார். அது மட்டுமின்றி சனீஸ்வரனின் உற்ற தோழர்.

உடல் நலம், தைரியம், மன வலிமை ஆகியவற்றைப் பெறுவதற்கு, எதிரிகள் தொல்லை நீங்க, திருமணத் தடைகள் தாமதங்கள் நீங்குவதற்கு பக்தர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்கின்றனர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆந்திர மாநிலங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். அதுமட்டுமின்றி பலரும் ராமாயணம் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Also see... சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கினால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா?

ஆஞ்சநேயர் வழிபாடு என்று வரும்பொழுது வெற்றிலை மாலை மற்றும் வெண்ணை காப்பு சாற்றுவது ஆகிய இரண்டுமே மிகச்சிறந்த பலன்களைக் கொடுத்து, அனுமனின் ஆசியை வழங்கும்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Telugu

அடுத்த செய்தி