முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தமிழ்நாட்டில் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழ்நாட்டில் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய பக்தர்கள் சாமி தரிசனம்

இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம்

இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம்

Tamilnadu Sivarathiri | தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய பூஜைகள் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்ச பூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய் விளக்கேற்றி நேர்த்திக்கடனை செலுத்தினர். பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் மேற்கொண்டனர். மூலவருக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வெள்ளி தேர் பவனி நடைபெற்றது. ராமநாத சுவாமி மற்றும் பருவத வர்த்தினி அம்பாள் மின் அலங்காரத்துடன்கூடிய வெள்ளி ரதத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் நமச்சிவாய முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன. மஞ்சள், சந்தனம், தயிர், பால், திரவியப்பொடி உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் நான்கு கால பூஜைகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவுகள் என சிவராத்திரி களைகட்டியது.

வரிசையில் செல்வதற்கான சரியான ஏற்பாடுகள் இல்லாததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.தென்னிந்தியாவின் உயரமான சிவன் சிலையைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சிவன் கோயில் நீண்ட தூரம் வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.

விழாவை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இதேபோல், திருவண்ணாமலை, மதுரை, நாகை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட பல ஊர்களில் உள்ள சிவாலயங்களிலும் சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

First published:

Tags: Tamilnadu