ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஐப்பசி மாதம் துலாம் ராசியில் நீசமாகும் சூரியன் - ஆபத்தா அல்லது ஆளுமையா.!

ஐப்பசி மாதம் துலாம் ராசியில் நீசமாகும் சூரியன் - ஆபத்தா அல்லது ஆளுமையா.!

சூரிய பகவான்

சூரிய பகவான்

Lord Surya | மிதுன ராசியில் செவ்வாய், மகர ராசியில் வக்கிர நிவர்த்தி பெற்ற சனி மற்றும் மீன ராசியில் குரு ஆகியவை, இந்த மாதம் முழுவதும் அந்தந்த ராசியிலேயே சஞ்சரிக்கின்றன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் மாதங்களில் ஏழாவது மாதம் ஐப்பசி! ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். நவக்கிரகங்களில் ராஜகிரகமாக கருதப்படும் சூரியன் சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசியில் நீசமடைகிறார். எனவே இந்த மாதத்தில் சூரியனின் பெயர்ச்சி பல ராசிகளுக்கும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது கன்னி ராசியில் சஞ்சரித்து வரும் சூரியன் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி அன்று துலாம் ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே துலாம் ராசியில் கேது சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். எனவே, சூரியனுடன் மாதம் முழுவதுமே வேறு சில கிரகங்களும் சஞ்சரிக்க இருக்கின்றன.

ஐப்பசி மாதம் குழந்தை பிறக்கலாமா?

ஐப்பசி மாதம் சூரியன் நீசமாக இருக்கிறது. சூரியன் என்பது தந்தையின் காரகத்துவம் பெற்ற கிரகம் ஆகும். அதுமட்டுமல்லாமல் சூரிய கிரகம் அரசு ஆள்பவர்கள், அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள், அதிகார பணியில் இருப்பவர்கள் ஆகியவற்றை குறிக்கும். எனவே சூரியன் துலாம் ராசியில் நீசமடைவது இத்தகைய பதவிகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்து விளைவிக்குமா, தந்தைக்கு ஆபத்து ஏற்படுமா என்றெல்லாம் கேள்விகள் உள்ளன.

அதே போல, ஐப்பசி மாதம் சூரியன் நீசமாக இருக்கும் பொழுது குழந்தை பிறக்கலாமா என்றும் பலவிதமான ஐயங்கள் உண்டு! உலகை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சூரியன் நீசமாக இருக்கும் பொழுதுதான் ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் பிறந்தார். ஆனால் அவர் மாமன்னனாக உலகை வென்று ஆட்சி புரிந்த சக்கரவர்த்திகளின் ஒருவர். எனவே பொதுவாக ஐப்பசி மாதத்தில் நீசமாக சூரியன் இருக்கும் பொழுது குழந்தை பிறந்தால் பிறகு அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. உண்மையில், சுக்ரனின் வீடான துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பது ஒரு வகையான ராஜ யோகம்.

சூரியன் நீசம் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்?

சூரியன் நீசம் என்பது, சூரியன் உங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறது, லக்னத்திற்க்கு எந்த பாவமாக துலாம் ராசி வருகிறது என்ற அடிப்படையில் பலன்கள் அமையும். எனவே சூரியன் நீசம் என்பதால் அதிகாரப் பதவி, அரசு பதவி ஆகியவற்றிற்கு ஆபத்து ஏதும் வராது. ஐப்பசி மாதத்தில் ஒரு நாளில், காலை மற்றும் மாலையில் பிறந்த இரண்டு குழந்தைகளின் ஜாதகத்திலும் சூரியன் நீசமாக இருக்கும். ஆனால், பிறந்த நேரத்தின், நட்சத்திரத்தின் அடிப்படையில் எல்லாமே மாறும். எனவே, எல்லாருக்கும் நீச சூரியன் பாதிப்பை ஏற்படுத்தாது.

Also Read : குரு பகவானின் அருளால் இந்த ராசியினருக்கு தீபாவளிக்கு பிறகு நினைத்தது நடக்கும்..!

ஐப்பசி 2022 ஆம் ஆண்டு ராஜயோகம் பெறும் சூரியன் பெயர்ச்சி :

2022 ஆம் ஆண்டு நீசமாகும் சூரியன், மாதத்தின் பெரும்பாலான நாட்களில் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். அதாவது ஒரு கிரகம் நீசமடையும் பொழுது அதனுடன் வேறு சில கிரகங்கள் இருக்கும் பொழுது அது ரத்தாகி ராஜ யோகம் பெறும் கிரகமாக மாறும்.

இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் சூரியன் பெயர்ச்சி ஆன அடுத்த நாளே அதாவது ஐப்பசி இரண்டாம் நாளே சுக்கிரனும் கன்னி ராசியில் இருந்து தனது ஆட்சி வீடான துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஒரு சில ராசிகளில், சுக்கிரன் சூரியன் இணைவு மிகப்பெரிய ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் சூரியனுக்கு பலம் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம்.

ஏற்கனவே துலாம் ராசியில் கேது அமர்ந்து இருக்கிறார், துலாம் ராசியில் சூரியன் கேது உடன் இணைகிறார். ஐப்பசி 2 ஆம் நாள், சுக்கிரன் இணைந்த ஒரு வாரத்திலேயே புதனும் இணைகிறார். எனவே, சூரியன், சுக்கிரன், புதன், கேது இந்த நான்கு கிரகங்களுமே கிட்டத்தட்ட 20 நாட்கள் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் இருக்கின்றன.

Also Read : பல்லி விழும் பலன்கள் : பல்லி தலையில் வலது, இடது புறத்தில் விழுந்தால் என்ன நடக்கும்?

இதனால் ஒரு சில குறிப்பிட்ட ராசிகளுக்கு பெரிய தாக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமில்லாமல் துலாம் ராசி நட்சத்திரங்களான சுவாதி விசாகம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வரும் போது சந்திரனும் சேர்ந்து ஐந்து கிரகங்கள் ஒரே ராசியில் இருக்கும் அம்சமும் வருகின்றன. இந்த கிரகங்களை நேர் பார்வையாக ராகு பார்ப்பதால் கூடுதலாக தாக்கம் ஏற்படலாம்.

இதை தவிர்த்து, மிதுன ராசியில் செவ்வாய், மகர ராசியில் வக்கிர நிவர்த்தி பெற்ற சனி மற்றும் மீன ராசியில் குரு ஆகியவை, இந்த மாதம் முழுவதும் அந்தந்த ராசியிலேயே சஞ்சரிக்கின்றன.

Also Read : நாயகியின் நவராத்திரி - கதையும் காரணமும்.!

பரிகாரங்கள்:

அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு, வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமி ஆலயத்துக்கு சென்று விளக்கேற்றுவது, சூரியனுக்கு நீர் வழங்கி வழிபடுவது, ஆகியவை பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்கும்.

Published by:Selvi M
First published:

Tags: Astrology, God, Tamil News