Home /News /spiritual /

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிப்பு...

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிப்பு...

சபரிமலை

சபரிமலை

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு இன்று முதல் E சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு.

    சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு தனலக்ஷ்மி வங்கியுடன் இணைந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இனிமேல் E சேவை மூலமாக காணிக்கை செலுத்த வசதி செய்துள்ளது. இதன் படி Google pay வழியாக இன்று முதல் பக்தர்கள் காணிக்கை செலுத்த முடியும். பக்தர்களுக்கு காணிக்கை செலுத்த சன்னிதானம், நிலக்கல், ஆகிய இடங்களில் QR code போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்கில் QR code போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் 9495999919 என்ற எண் மூலம் google pay வழியாக காணிக்கை செலுத்த முடியும். இதே போல சபரிமலைக்கு செல்லும் பாதைகளில் பல்வேறு இடங்களில் காணிக்கை செலுத்த QR Code போர்டு வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சபரிமலை செயல் அலுவலர் V. கிருஷ்ண குமார வாரியர் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த E காணிக்கை வசதி பக்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் பக்தர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று அவர் கூறினார்.

    மேலும் படிக்க... மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sabarimalai Ayyappan temple

    அடுத்த செய்தி