• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • நாளை ஐப்பசி ஞாயிற்று கிழமை.. சூரிய வழிபாடு செய்ய உகந்தநாள்...

நாளை ஐப்பசி ஞாயிற்று கிழமை.. சூரிய வழிபாடு செய்ய உகந்தநாள்...

சூரிய வழிபாடு

சூரிய வழிபாடு

சூரிய நமஸ்காரம் செய்தால் கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். வீட்டு வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சுபிட்சமும் மன நிம்மதியும் பெற்று வாழ்வோம் என்பது நம்பிக்கை...

  • Share this:
    கண்கண்ட தெய்வமாக வணங்கப்படும் சூரிய பகவானுக்கு உரிய தினம் ஞாயிற்றுக்கிழமை. நாளை ஐப்பசி மாத ஞாயிறு என்பதால், சூரியனை வழிபட வேண்டியது மிகவும் அவசியம். இந்த தினத்தில் சூரிய பகவானுக்கு உரிய மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் வந்து சேரும். கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்....

    சூரிய பகவானை வழிபடும் முறை

    நாளை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரியன் உதயத்திற்கு முன்பாகவே உங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அதன் பின்பு சூரிய உதயத்தின் போது, வீட்டிலிருந்து வெளியே வந்து, சூரிய பகவானைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி மனதார வணங்க வேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும்படி வேண்டிக் கொள்வது அவசியம்.  ஆண்களாக இருந்தால் இரு கைகளையும் தலைக்கு மேல் பக்கமாக உயர்த்தி வணங்கி, சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களாக இருந்தால் இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேரே வைத்து கும்பிட்டு, சூரிய பகவானை வணங்கி நமஸ்காரம் செய்து வழிபடுவது மிகவும் நல்லது.

    சூரிய மந்திரத்தை உச்சரிக்கும் முறை

    ‘ஓம் ஸ்ரீம் ஆதித்யாய நமஹ’

    இந்த ஒரு வரி மந்திரத்தை சூரியனைப் பார்த்து மூன்று முறை உச்சரிக்க வேண்டும். அதன் பின்பு உங்களுடைய பூஜை அறைக்குள் வந்து நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தை பார்த்து மனதார 108 முறை உச்சரித்து பாருங்கள். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். பிரச்சினைகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் மன உறுதி உங்களிடம் ஏற்பட்டுவிடும். இந்த வழிபாட்டினை வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில், இந்த முறையை பின்பற்றி சூரிய பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று.

    மேலும் வீட்டு வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதேபோல் மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திலும், வீட்டில் தீபம் ஏற்றி வைத்து சூரிய பகவானை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து, உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

    முக்கியமான சூரிய வழிபாடு

    சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது 'ரதசப்தமி'. இதை சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.

    பலன்கள்

    சூரிய நமஸ்காரம் செய்தால் கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். வீட்டு வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சுபிட்சமும் மன நிம்மதியும் பெற்று வாழ்வோம் என்பது நம்பிக்கை...

    மேலும் படிக்க... குரு பகவானின் பயோடேட்டா குறித்து உங்களுக்கு தெரியுமா?

    பஞ்ச பூதக் கோவில்களும் அதன் சிறப்புகளும்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: