Super Pink Moon | இளஞ்சிவப்பு முழு நிலா குறித்து ஜோதிடம் சொல்வது என்ன..?

இந்த இளம் சிவப்பு முழுநிலவு தெரிவதற்கு ஜோதிட ரீதியாக எந்த ஒரு பரிகாரமும் இல்லை.

Super Pink Moon | இளஞ்சிவப்பு முழு நிலா குறித்து ஜோதிடம் சொல்வது என்ன..?
இளஞ்சிவப்பு நிலா
  • Share this:
இளஞ்சிவப்பு முழு நிலவு இன்று இரவு தோன்றுகிறது.  வானில் நிகழும் இந்த அற்புதம், ஜோதிடரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக இது எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து ஜோதிடர் பெரியகுளம் ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.

பூமி சூரியனை சுற்றும் போது சூரியனுக்கு மிக அருகில் செல்லக்கூடிய மாதம் புரட்டாசி. சூரியனிலிருந்து வரக்கூடிய மாதம் பங்குனி, இதேவேளையில் நிலவு பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய மாதம் பங்குனி.

பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி நாள் அன்று வழக்கமான அதைவிட மிகப் பெரிய அளவாகவே நிலவு தெரியும். இந்திய நேரப்படி சரியாக 7ஆம் தேதி காலை 8.44 மணிக்கு பௌர்ணமி ஏற்படுகிறது. இதை நாம் ஏழாம் தேதி அன்று இரவு காண முடியும்.


இது இளஞ்சிவப்பு நிலா என அழைக்கப்பட்டாலும், அது அந்த நிறத்தில் இருக்காது. வட அமெரிக்காவில் ஓர் இளம் சிவப்பு மலர் கொத்துக் கொத்தாக பூப்பதால், இந்த சூப்பர் மூனுக்கு ‘சூப்பர் பிங்க் மூன்’ என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ஜோதிட ரீதியாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் மிக மிக முக்கியமான ஒரு நாளாக கருதப்படுகிறது. பூமியின் வட்டப்பாதையில் சூரியனை சுற்றும் போது, சூரியனுக்கு மிக அருகில் செல்லக்கூடிய மாதமாக புரட்டாசி மாதம் சொல்லப்படுகிறது. எனவே அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை அன்று முன்னோர்களை வழிபட உகந்த நாளாக மகாலய பக்ஷ அமாவாசையை நமது முன்னோர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

அதேவேளையில் பங்குனி மாதம் ஏற்படக்கூடிய பௌர்ணமி அன்று குல தெய்வத்தை வழிபடுவதற்காக நமது முன்னோர்கள் கொடுத்திருக்கிறார்கள். பங்குனி மாதம் வரக்கூடிய பவுர்ணமி பங்குனி உத்திரத்தன்று வரும் ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி ஆகிய மாதங்கள் என்று சொல்லப்படும். இந்த மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் மிகப்பெரிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் என்பது கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் கூடிய காலமாகும். இந்த மாதத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் வரும் பொழுது அமாவாசை ஏற்படுகிறது. இந்த நாள் மகாளய அமாவாசை என்று சொல்லப்படுகிறது. மீன ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் கூடிய காலமாக பங்குனி மாதம் சொல்லப்படுகிறது. சூரியனும் சந்திரனும் 180 டிகிரி நேர்கோட்டில் வரும் பொழுது பௌர்ணமி நிகழ்கிறது.
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading