முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Sun Transit 2023 : இந்த 3 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

Sun Transit 2023 : இந்த 3 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

sun transit 2023 palan

sun transit 2023 palan

சூரியன் பெயர்ச்சி 2023 : இந்த மூன்று ராசிக்கும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நவ கிரகங்களின் தலைவனாக சூரியன் கருதப்படுகிறார். இவர் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுவார். ஜோதிடத்தில் சூரியனின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நேற்று (பிப்ரவரி 13 ஆம் தேதி) சூரியன் கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் பிரதிபலிக்கும். சிலருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சிலருக்கு அசுர பலன்களை கொடுக்கும். கும்பத்தில் சூரியன் இருப்பது சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியை கொடுக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என பார்க்கலாம்.

ரிஷபம் :

ரிஷபத்தின் 10 ஆவது வீடான லாப தானத்திற்குள் சூரியன் பெயர்ந்துள்ளார். இதனால், தொழில் மற்றும் வியாபார ரீதியிலான தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வுகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு உயர்அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமைக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.

மிதுனம் :

சூரியன் மிதுனத்தின் 9 வது வீடான லாப ஸ்தானத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார். இதனால், உங்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மேலும் சூரியனின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வீண் செலவுகளை குறைப்பது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். உங்களின் சேமிப்புக்கு இது உதவியாக இருக்கும்.

தனுசு :

சூரியன் தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனால், வெளிநாட்டுகளில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாளாக உங்களுக்கு கிடைக்காமல் இருந்த பணம் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, நீங்கள் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். சூரியனின் ஆசியால் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும்.

First published:

Tags: Astrology, Rasi Palan, Zodiac signs