ஜோதிடத்தில், கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஏனென்றால், ஒவ்வொரு கிரகங்களின் இயக்கமும் நமக்கு பல பலன்களை கொடுக்கும். அது நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். இந்நிலையில், குரு தனது நட்பு கிரகமான சூராயனை சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசியில் சந்திக்க உள்ளனர். மேஷ ராசியில் குரு நட்பாகவும், சூரியன் உச்சத்திலும் உள்ளார். வியாழன் தன் நண்பனான சூரியனுடன் இருக்கும் போது சூரியன் மேஷ ராசியில் உயர்ந்து நிற்கும். சூரியன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கிரகங்களும் நெருப்பு உறுப்பு. எனவே, மேஷ ராசியில் குருவும் சூரியனும் கூடுவதால் ஏப்ரல் முதலே வெப்பம் அதிகமாக இருக்கும். அதுமட்டும் அல்ல, இவர்களின் இவர்களின் இணைவு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அதாவது, சில ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும், பணவரவு அதிகரிப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றம், சமூக அந்தஸ்து என அனைத்து பலன்களும் கிடைக்கும். சூரியன் - குரு சஞ்சாரம் எப்போது? : அனைத்து கிரகங்களும் தனது ஈர்ப்பு விசைக்கு ஏற்ப நகர்வதால், சூரியன் குடும்பத்தில் தந்தை கிரகமான கருதப்படுகிறது. சூரியன் அதிகாரம், ஆற்றல், ஆரோக்கியம், உயிர்ச்சக்தி, நம்பிக்கை ஆகியவற்றுக்கு முன்னோடியாக திகழ்கிறார். வாயு ராட்சசனான வியாழன் அறிவு, புரிதல், அதிர்ஷ்டம், வளர்ச்சி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை கொடுக்கக்கூடியவர். வரும் 22 ஏப்ரல் 2023 அன்று, அதிகாலை 3:33 மணிக்கு வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி, ராமரின் ராசியான மேஷத்திற்கு மாறுகிறார். ஏப்ரல் 14, 2023 அன்று சூரியன் மேஷ ராசிக்கு ஏற்கனவே மாறியிருப்பதால், சூரியன் மற்றும் குறு ஆகிய இரண்டு ஒரே வீட்டில் சந்திப்பார்கள். மேஷம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் வியாழனும் ஒரே ராசியில் சந்திப்பது அரிதான நிகவுகளில் ஒன்று. சூரியன் மற்றும் வியாழன் ஆகியவை நெருப்பு உறுப்புகளின் அடையாளமாக கருதப்படுகின்றன. எனவே, இவர்கள் இருவரும் ஒரே ராசியில் சந்திப்பது, மேஷத்தின் பலத்தை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் மனதை வெல்வீர்கள். உங்கள் மரியாதை அதிகரிப்பதுடன் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மீனம்: சூரியன் - வியாழன் இணைவு மீனத்தில் இரண்டாவது வீட்டில் நிகழ்வதால், மீன ராசிக்கும் இது பல நன்மைகளை வழங்கும். இரண்டாம் வீடு லக்கின ஸ்தானம் என்பதால், உங்களுக்கு நிதி நிலைமைகள் மேம்படத் தொடங்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் உரையாடல் மூலம் மற்றவர்களை கவர முடியும். தொழில் வாழ்க்கை பற்றி பேசினால், பதவி உயர்வு மற்றும் பண அதிகரிப்புக்கான வாய்ப்புகள் உங்களுக்கு வரும். நீண்ட நாட்களாக கைக்கு கிடைக்காமல் இருந்த பணம் உங்களுக்கு கிடைக்கும். சிம்மம் : சூரியன் மற்றும் வியாழன் இணைவு உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் நடைபெறுவதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இயல்பாகவே, 5,7,9 ஆம் வீடுகள் நல்ல பலன்களை தரக்கூடியது. அந்த வகையில், இரண்டு கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றியையும் செழிப்பையும் தரும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சிம்மத்தின் ஆட்ச்சிநாதன் சூரியன் என்பதால், இந்த நேரத்தில் சூரியன் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தருவார். வெளியூர் பயணம் செல்ல விரும்புவோருக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு, சூரியன் மற்றும் வியாழன் சேர்க்கை தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் சூரியன் மற்றும் வியாழன் இணைவு நிகழ்கிறது. இதனால், உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதே சமயம், வர்த்தகர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும்.நீங்கள் நினைத்த அனைத்து விஷயங்களும் நடக்கும்.