Home /News /spiritual /

சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வழிமுறைகள் என்னென்ன?

சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வழிமுறைகள் என்னென்ன?

சுமங்கலிப் பிரார்த்தனை

சுமங்கலிப் பிரார்த்தனை

சுமங்கலிப் பிரார்த்தனை மூன்று விதமாக நடைபெறும். எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள். இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள். இரண்டு புடைவைகள் வைப்பார்கள்.

மேலும் படிக்கவும் ...
  சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம், சீமந்தம் போன்ற விஷேசங்களுக்கு முன்னர் செய்வது ஆகும். சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நல்ல நாள் மற்றும் கிழமைகள் பார்க்க வேண்டும். கரிநாளாக மட்டும் இருக்கக் கூடாது. ஒற்றைப்படை எண்ணிக்கையில், சுமங்கலிப் பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு வணங்குவது தான் சுமங்கலிப் பிரார்த்தனை.

  வீட்டில் உள்ள பெண்களுக்கு, கல்யாணத்திற்கு முன்னரும் வீட்டிற்கு மருமகள் வந்த பிறகும் இதைச் செய்வது வழக்கம். மகள் போன்ற உறவுகளை சுமங்கலிப் பிரார்த்தனையில் முக்கியமாக உட்கார வைக்க வேண்டும். இவர்களைத் தவிர, வேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம். ஆனால், மருமகள் உறவில் உள்ளவர்கள் யாரும் உட்காரக் கூடாது.

  இந்த சுமங்கலிப் பிரார்த்தனை மூன்று விதமாக நடைபெறும். எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள்.

  இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள். இரண்டு புடைவைகள் வைப்பார்கள். சில வீடுகளில் ஒரே இலை தான். ஒரே புடைவைதான். இதெல்லாம் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின் எண்ணிக்கை அமையும்.

  சில குடும்பங்களில், சுமங்கலிகளோடு ஒரு கன்யா பெண் குழந்தையையும் அழைப்பது வழக்கத்தில் இருக்கிறது. அப்படியிருந்தால், அந்தக் குழந்தைக்கும் உடைகள் வாங்க வேண்டும். முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது, ஒரு குடும்பத்தில் மாமியார், மருமகள் இருவரையும் அழைப்பதில்லை. ஒருவரை, அநேகமாக மாமியாரை மட்டுமே அழைப்பார்கள். விதிவிலக்காக, மருமகள், மாமியார் இருவருமே வீட்டுப் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அழைக்கலாம்.

  உணவு சமைக்கும் முறை

  சிரார்த்த காரியங்களுக்கு இருப்பதைப் போல், இதற்கு எல்லாம் சேர்க்கக் கூடாது என்பதில்லை. இங்கிலீஷ் காய்கறிகள் எனக் குறிப்பிடப்படும், முட்டைக் கோஸ், பீன்ஸ், நூல்கோல், இவற்றோடு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றைத் தவிர, மற்ற காய்கறிகளைச் சேர்க்கலாம்.கலந்த சாத வகைகளில், தேங்காய், எலுமிச்சை, புளியோதரை ஆகியவற்றில் இரண்டு வகை செய்வது வழக்கம். சில வீடுகளில், தயிர்சாதமும் செய்கிறார்கள்.

  சிரார்த்த தினத்திற்கு மறுநாளோ அல்லது அதை ஒட்டியோ, சுமங்கலிப் பிரார்த்தனை செய்வதாக இருந்தால், எள்ளுருண்டை கட்டாயம் செய்ய வேண்டும். விசேஷங்களை ஒட்டிச் செய்வதாக இருந்தால் பொதுவாக, எள்ளுருண்டை சேர்ப்பதில்லை. மேற்கூறிய யாவற்றையும், அவரவர் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுக் கொண்டு செய்து கொள்ளவும்.

  அதிசயப் பொண்டுகள் விளக்கம்

  ஒரு ஊரில், ஒரு குடும்பத்தில், ஏழு மருமகள்கள் இருந்தார்கள். அவர்களின் மாமியார், மிகக் கடினமான சுபாவம் உள்ளவர். மருமகள்களை கடுமையாக வேலை வாங்குவதோடு, வயிறார உணவும் வழங்குவதில்லை அந்த மாமியார். ஒரு நாள், அவள் வெளியூர் சென்றிருந்த போது, அத்தனை மருமகள்களும், ஆசை தீர விதவிதமாகச் சமைத்தார்கள். அனைவரும் ஒன்றாகச் சாப்பிட வேண்டுமென்று திட்டமிட்டு, முதலில் இலை போட்டு பரிமாறி முடித்தார்கள்.

  எல்லோரும் சாப்பிட அமர்ந்தபோது, வாசல் கதவை தட்டும் சப்தம் கேட்டு, ஒருத்தி சென்று, ஜன்னல் வழியாகப் பார்த்த போது, மாமியார் வந்து விட்டது தெரிந்தது. உடனே, அவள் வந்து சொல்ல, எல்லா மருமகள்களும் பதறிவிட்டார்கள். உடனே, பூஜை அறைக்கு வந்து இறைவியை வேண்ட, அவர்கள் எல்லோரும் காற்றில் கரைந்த கற்பூரம் போல் அம்பிகையுடன் ஒன்றிவிட்டார்கள்.

  இவ்வாறு, தேவியுடன் இணைந்த அந்த பெண்களின் வழி வந்தவர்களே, அதிசயப் பெண்டுகள் செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அழைக்கப்படும் பெண்கள், திருமணம் முதலிய விசேஷங்களுக்கு உடுத்துவது போல், பட்டுப்புடவையோ, மற்ற புடவைகளோ உடுத்தலாம். கல்யாணத்திற்கு சமைப்பப்பது போல் இதற்கும் சமைக்கலாம்.

  சுமங்கலிப் பிரார்த்தனை வழிமுறை:

  முதல் நாளே, புடவைகளை, மடியாக உலர்த்தவும். (புதுப் புடவையை அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், முதலில் அவர்கள் மடிப் புடவை தான் கட்டிக் கொள்ள வேண்டும். அந்த நாளில், காலையில், நலுங்கு வைத்து, மஞ்சள், குங்குமம், பூ வைத்து, தலையில் எண்ணெய் வைத்து, சீகக்காய் பொடி இவற்றைக் கொடுத்து விடவும். சமையலும் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும். பின் காலில் மஞ்சள் பூசி, ஜலம் விட்டு அலம்பி, உள்ளே அழைத்து வர வேண்டும்.

  மேலும் படிக்க... திருப்பதியில் வேண்டுதலுக்காக திருமாங்கல்யத்தை (தாலி) கழட்டி உண்டியலில் போடலாமா?

  பின் ஒரு மணையில் கோலம் இட்டு, அதில் கொடுக்க வேண்டிய ஒரு புடவை மட்டுமாவது, அப்படியே மடித்து வைக்காமல், கொசுவி, அதனுடன் ஒரு ப்ளவுஸ் பிட் வைத்து, அதன் மீது, நிறைய மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம், பூ, கண்மை,சிறிய கண்ணாடி, தேங்காய், பழம், மருமகளின் சில நகைகள் இவற்றை வைக்க வேண்டும்.

  பின், அனைவரும் வெளியே சென்று விடவேண்டும். அந்தக் கதவை மூடி விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து, கையைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும். பின் படத்தின் மீது, பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து விட்டு,பெண்டுகள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு உரிய உடைகளைக் கொடுத்து அவர்களை நமஸ்காரம் செய்து விட்டு, பிறகு, சாப்பிட வேண்டும்.

  மேலும் படிக்க... Diwali 2021: தீபாவளி எப்போது? கங்கா ஸ்நானம், பூஜை செய்யும் நேரம் என்ன?
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Pariharam | பரிகாரம்

  அடுத்த செய்தி