சுடலை மாடசாமி: பாசமும் கோபமும் நிறைந்த சக்தி வாய்ந்த காவல் தெய்வம்

சுடலை மாடசாமி

சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக சுடலை மாடன் சாமி கருதப்படுகிறார்.

 • Share this:
  தென் மாவட்டங்களில் சுடலை மாடசாமியை காவல் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக சுடலை மாடசாமியை காவல் தெய்வமாக போற்றி வருகின்றனர். சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம். கிராமபுறங்களில் சுடலை மாடன் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வது முக்கியமான ஒன்றாகும். எந்த ஒரு சுபநிகழ்ச்சிக்கும் சுடலை மாடன் சாமியிடம் அனுமதி பெறுவது கிராமத்தில் வழக்கமாக உள்ளது.

  சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக சுடலை மாடன் சாமி கருதப்படுகிறார். சுடலை மாடன் என்று அழைக்கப்படுவதற்கும் ஒரு காரணம் உள்ளது. பார்வதி கயிலாத்தில் ஆயிரம் தூண்களை கொண்ட மண்டபத்தில் உள்ள தூண்விளக்கு சுடரில் பிறந்ததால் மாடன் என்பதாகும். சுடலை என்பது உயிரற்ற உடலை குறிப்பதாக கருதப்படுகிறது. மயானத்தில் எரிந்த பிணத்தை தின்றதால் சுடலை மாடன் என்று அழைக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

  Also read : உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இப்படி உள்ளதா? அப்போ கடன் தான் அதிகரிக்கும்

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள வடலிவிளை ஊரில் உள்ள சுடலைமாடல் கோவில் மற்றும் வடக்கு சூரங்குடியில் உள்ள சுடலை மாடல் கோவில் மிகவும் பிரசித்து பெற்ற கோயில் ஆகும். இதேப்போன்று திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி சுடலை மாடன், ஏர்வாடி அருகே சிறுமளஞ்சி சுடலை மாடன், அம்பாசமுத்திரம் அருகே உள்ள உய்காடு சுடலை மாடன் கோயில்கள் சிறப்பு வாய்ந்தவையாகும்.

  நாகர்கோவிலில் ஒழுகின சேரி சுடுகாட்டில் இருக்கும் மயான/மாசான சுடலைமாடன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. இங்குள்ள சுடலைமாடனே மிகப்பெரிய சுடுக்காட்டில் வீற்றிருக்கும் மயான சுடலை ஆவர். பலர் இந்த கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: