Home /News /spiritual /

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்த மாணவர்கள் இன்று கல்வி சார்ந்த சாதனைகளை நிகழ்த்துவார்கள்... (மே 12, 2022)

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்த மாணவர்கள் இன்று கல்வி சார்ந்த சாதனைகளை நிகழ்த்துவார்கள்... (மே 12, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 12ம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்

குழுக்களுக்கு தலைமை தாங்குபவர்கள் இன்று பாராட்டு மற்றும் விருதுகளுடன் வீடு திரும்புவீர்கள். பணியிடத்தில் இருப்பவர்கள் மற்றும் உறவு ரீதியாக தொடர்பில் இருப்பவர்கள் உங்கள் மீது நன்மதிப்பு வைத்திருப்பார்கள். ஒப்பந்தங்களை மேற்கொள்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, கடன் பெறுவது, நேர்காணல்களுக்கு விண்ணப்பம் செய்வது போன்ற அனைத்தும் சிறப்பாக இருக்கும். சொத்து வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - பெண்களுக்கு ஆரஞ்சு துணி தானமாக வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தொடர்பு ரீதியாக நீங்கள் எழுதும் எழுத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அவை தெளிவானதாக இருக்க வேண்டும். ஏற்கனவே நிறைய பொறுப்புகள் இருப்பதாக உணர்வதால் மேற்கொண்டு முதலீடுகளை செய்ய வேண்டாம். பணியிடங்களில் மூத்தவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடும். இருப்பினும், சிறப்பான செயல்திறனை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் தங்களது உடல்நலனில் இன்று அலட்சியம் காட்டக் கூடாது.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் பால் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் தாய் மற்றும் கடவுளின் ஆசீர்வாதத்தில் இன்று நல்ல வளர்ச்சி கிடைக்கும். பணியிடத்தில் உங்களை வெளிக்காட்டவும், உங்கள் திறனை வெளிப்படுத்தவும் இன்று சிறந்த நாளாகும். உங்கள் பேச்சை பார்த்து சுற்றத்தார் ஆச்சரியம் அடைவார்கள். நீங்கள் எடுக்கக் கூடிய முடிவுகள் சாதகமான பலனை தரும். காதலில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருப்பதுடன் பரிசுகளை பரிமாறிக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பணிப்பெண்ணுக்கு குங்குமப்பூ தானமாக வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அரசியல் மற்றும் விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும். இன்று பயணம் செய்வதற்கு உகந்த நாளாகும். அரசு அதிகாரிகள், வங்கிப் பணியாளர்கள், சமையலர்கள், கட்டுமான துறையினர் மற்றும் மருந்து தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான சூழல் காணப்படும். மாணவர்கள் இலக்கை நிறைவு செய்வார்கள். இன்று அசைவம் மற்றும் மதுபானத்தை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு போர்வை அல்லது துணி தானமாக கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கனவுகள் மற்றும் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள இன்று உகந்த நாளாகும். அன்பு, சொத்து, புகழ், வளம், சொகுசு மற்றும் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் இன்றைக்கு கிடைக்கும். கடன் வலையில் சிக்கி விடாதீர்கள். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். பணியில் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்கள் கல்வி சார்ந்த சாதனைகளை நிகழ்த்துவார்கள். காதலில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பச்சை நிற காய்கறி மற்றும் பழங்களை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எடுத்துக் கொண்ட செயலை செய்து முடிப்பதில் கற்பனை திறன் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த கால கசப்புகளை மறந்து விட்டு, உறவுகளிடம் சமாதானத்தை கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும். மாணவர்கள், நடனக் கலைஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு வாய்பு அல்லது பணப்பலன் கிடைக்க இருக்கிறது. சொத்து வாங்கும் காரியம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமத்தில் வெள்ளை நிற இனிப்புகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வழக்குகளில் வெற்றி கிடைக்கும் நாளாகும். மூத்தவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யுங்கள். விவாதங்கள் இன்றி உறவுகள் மீண்டும் மலரும். விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பாராட்டு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் பங்குபெற அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களுக்கு சிறந்த நாளாகும். கடன் கொடுப்பவர்கள் மற்றும் வங்கிப் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - வெண்கலம் அல்லது காப்பர் பாத்திரங்கள் தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

செயலை திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் உகந்த தினமாகும். உங்களுக்கு பணம், புகழ், அறிவு, மரியாதை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அன்பு ஆகியவற்றை வழங்கிய கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக கோவிலுக்கு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை நிறைவாகவும், திருப்தி அளிக்க கூடியதாகவும் இருக்கும். ரொமாண்டிக் உணர்வுகள் நனவாக கூடிய நாள் இதுவாகும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு தர்பூசணி தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். மாணவர்கள், மருத்துவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். சொத்து மற்றும் ஒப்பந்தம் ரீதியாக இடைத்தரர்கர்களை அணுகலாம். தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதால் முன்னோக்கி செல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பர்ப்பிள்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - பணிப்பெண்ணுக்கு சிவப்பு சேலை தானமாக வழங்கவும்.

மே 12 அன்று பிறந்த பிரபலங்கள் : ஆதா கான், ஜிட்டூ கிருஷ்ணமூர்த்தி, பிரியங்கா போகத், வி.பி.சிங் பத்னோர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி