ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா... சொர்க்கவாசல் திறப்பு எப்போது? முழு விவரம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா... சொர்க்கவாசல் திறப்பு எப்போது? முழு விவரம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

Vaikunda Ekadasi 2023 | பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாக வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா  நாளை (டிசம்பர் 22-ம்தேதி) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல்வெளியில் கடந்த டிசம்பர் 14ம் தேதி காலை நடைபெற்றது.

Also see... Vaikunta Ekadasi 2023: வைகுண்ட ஏகாதசி 2023 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்..!

ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள், ஆலயத்தினரின் முன்னிலையில் முகூர்த்தக்கால் பூஜிக்கப்பட்டு பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் நடப்பட்டது. திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியானது திருநெடு தாண்டத்துடன் தொடங்கி, பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 22ம்தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கும் இந்த விழாவினையடுத்து, டிசம்பர் 23 -ம்தேதி முதல் பகல்பத்து உற்சவம் தொடங்கி நடைபெறுவதுடன் பகல்பத்து உற்சவத்தின் இறுதிநிகழ்வாக வரும் ஜனவரி 01- ம் தேதி மோகினி அலங்காரமும், முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு வரும் ஜனவரி 02- ம் தேதி திங்கள் கிழமை ( மார்கழி மாதம் 18ஆம் தேதி) அதிகாலை 04.45 மணிக்கு நடைபெற உள்ளது.

Also see... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வரலாறும் அதன் சிறப்புகளும்...

மேலும் இராப்பத்து ஜனவரி 02- ம் தேதி திங்கள் கிழமை ( மார்கழி மாதம் 18ஆம் தேதி) முதல்தொடங்குகிறது. இது ஜனவரி - 12-ம் தேதியன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது.

மேலும் நடப்பாண்டு சொர்க்கவாசல் நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு மற்றும் சேவைக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

First published:

Tags: Local News, Srirangam, Trichy, Vaikunda ekadasi