காவிரித் தாய்க்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் திருச்சி அம்மா மண்டபத்தில் காவிரித் தாய்க்கு சீர்வரிசைப் பொருட்கள் ஆடிப் பெருக்குக்கு வழங்கப்பட்டன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் திருச்சி அம்மா மண்டபத்தில் காவிரித் தாய்க்கு சீர்வரிசைப் பொருட்கள் ஆடிப் பெருக்குக்கு வழங்கப்பட்டன.

  • Share this:
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவரான நம்பெருமாள் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் மாலையில் காவிரித் தாயாருக்கு மங்களப் பொருட்களை சீர்வரிசையாக அளிப்பார். இந்த நிகழ்வு வருடா வருடம் நடப்பது வழக்கம்

    ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக.2,3 தேதிகளில் ஸ்ரீரங்கம், சமயபுரம், உறையூர், மலைக்கோட்டை, திருவானைக்காவல் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக நம்பெருமாள் அம்மா மண்டபத்துக்கு பதிலாக கோயில் வளாகத்தில் உள்ள ரங்கவிலாச மண்டபத்தில் ஆடி பெருக்கு அன்று பிற்பகல் 3.15 மணிக்கு எழுந்தருளினார். பின்னர், அங்கிருந்தவாறே காவிரித் தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.



    மேலும் படிக்க... மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா தொடங்கியது

    அதன்பின், காவிரித் தாய்க்கு உரிய சீர்வரிசைப் பொருட்களை கோயில் அர்ச்சகர்கள் எடுத்துக் கொண்டு ராஜகோபுரம் வழியாக மேள தாளங்கள் முழங்க அம்மா மண்டபத்துக்கு வருகை தந்து காவிரித் தாய்க்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். இதைத் தொடர்ந்து நம்பெருமாள் மாலை மாற்றிக் கொண்டு இரவு 7 மணிக்கு ரங்கவிலாச மண்டபத்திலிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் , உதவி ஆணையர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    மேலும் படிக்க... Aadi Perukku 2021 | கொரோனாவால் டெல்டா மாவட்டங்களில் களையிழந்த ஆடிப்பெருக்கு... ஆறுகளில் குறைந்த அளவே வழிபாடு நடத்திய பெண்கள்...



    தமிழக மக்களால் தாயாக வணங்கப்பட்டு வருகிறாள் காவிரித்தாய். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி அன்னைக்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது. கொரோனா பரவல் காரனமாக இந்த வருடம் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: