முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ஸ்ரீரங்கம் வெள்ளிக் கருட வாகன சேவை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..!

ஸ்ரீரங்கம் வெள்ளிக் கருட வாகன சேவை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..!

மாசி மாத கருட சேவை

மாசி மாத கருட சேவை

Srirangam Masi garuda Sevai | 'மாசி கருடச் சேவை, காசிக்கு சென்று வந்த புண்ணியம்' என்பதால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளிய காட்சியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படுவதுமான திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில், 9 நாட்கள் நடைபெறும் மாசித் தெப்ப உற்சவம் பிரசித்திப் பெற்றது.

நடப்பாண்டு மாசி தெப்போற்சவத்தின் முக்கிய நிகழ்வான, நம்பெருமாள் வெள்ளி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நேற்று நடந்தேறியது.ஸ்ரீரங்கம் மேலூர் தோப்பு ஆஸ்தான மண்டபத்திலிருந்து, வெள்ளி கருடவாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி, சாலை வழியாகச் சென்று, 4 உத்திர வீதிகளையும் வலம் வந்தார். பின்னர், வாகன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாசி கருடன்

ஸ்ரீரங்கத்தில் தை, மாசி, பங்குனி மாதங்களில் கருடசேவை நடைபெற்றாலும், அப்போதெல்லாம் நம்பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருள்வார். ஆனால், மாசிமாதம் நடைபெறும் கருட சேவையில் மட்டுமே நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வரலாறும் அதன் சிறப்புகளும்...

'காசிக்குச் சென்று வந்த புண்ணியம் மாசிக் கருடனைத் தரிசிக்க கிட்டும்' என்பது ஐதீகம் என்பதால், கருட வாகனத்தில் எழுந்தருளி, அருள்பாலித்த நம்பெருமாளை வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான மாசி தெப்பத்திருவிழா, வருகின்ற மார்ச், 2ம் தேதி நடைபெற உள்ளது.

First published:

Tags: Garuda Sevai, Local News, Srirangam