Home /News /spiritual /

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 6-ம் நாள் உற்சவம்... நீள்முடிகிரீடம் அணிந்து கம்பீரமாக நிற்கும் பெருமாள்...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 6-ம் நாள் உற்சவம்... நீள்முடிகிரீடம் அணிந்து கம்பீரமாக நிற்கும் பெருமாள்...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து 6ம் திருநாள்இன்று. நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம் அணிந்து, மார்பில் கல் வைத்த மகாலட்சுமி பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகதாசி பெருவிழாவின் 6ம்நாளான இன்று. நம்பெருமாள் நீள்முடிகிரீடம், மார்பில் மகாலட்சுமி பதக்கம் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    உலகப் புகழ்பெற்றதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா 21நாட்கள் நடைபெறும். முதல் பத்து நாட்கள் பகல்பத்து எனவும், அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் நடைபெறும். இந்த விழாக்களில் நாடுமுழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவமானது கடந்த 3 ம்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது,

    உற்சவத்தின் 6ம் திருநாளான இன்று நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம் அணிந்து, மார்பில் கல் வைத்த மகாலட்சுமி பதக்கம், வைரக்கல் அட்டிகை, ரத்தின அபயஹஸ்தம், காசு மாலை, முத்துச்சரம், வைர காதுகாப்பு உள்ளிட்ட திருவாரபரணங்களை சூடிக்கொண்டு மூலஸ்தானத்திலிருந்து தனுர் லக்னத்தில் புறப்பாடு செய்யப்பட்டார்.

    மேலும் படிக்க... இன்று சஷ்டி விரதம்... முருகனை வழிபட்டால் கவலைகள் நீங்கும்...

    பின்னர் ஆழ்வார்கள் புடைசூழ 'கண்ணிநுண் சிறுதாம்பு' பெரியதிருமொழியின் 11 பாசுரம் மற்றும் திருமங்கையாழ்வாரின் 'வாடினேன் வாடி' என்ற முதல் பாசுரம் என 250 பாசுரங்களை கேட்ட பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அரையர் சேவை புரிந்துவந்த நம்பெருமாள், பக்தர்களுக்கு சேவை சாதித்தி வருகிறார்.

    மேலும் படிக்க... உங்கள் ஜாதகத்தில் உள்ள சனியின் தாக்கத்தை குறைக்க சில பரிகாரங்கள்...

    பின்னர், மாலை 7மணிக்கு உபயம் கண்டருளி மூலஸ்தானத்தை சென்றடைகிறார். பெருந்திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளை சேவித்து வருகின்றனர்.

    செய்தியாளர் - கதிரவன், திருச்சி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Srirangam, Trichy, Vaikunda ekadasi

    அடுத்த செய்தி