நீண்டகால நோயை தீர்த்து ஆரோக்கியத்தை தரும் தன்வந்திரி பகவான்..

தன்வந்திரி

நமக்குத் தெரிந்தவர்களின் ஆரோக்கியத்துக்காக, தேக நலனுக்காக தீராத நோய் தீர வேண்டும் என்பதற்காக தன்வந்திரி பகவானை பிரார்த்திக்கலாம்.

  • Share this:
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றொரு புகழ் மிக்க வாசகம் உண்டு. நோயில்லாத வாழ்க்கையே பூமியின் சொர்க்கம் என்பார்கள். அப்பேர்ப்பட்ட நோய்களை போக்குவதற்கான, நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவும் தெய்வங்கள் உண்டு. ஆலயங்களும் உண்டு. அவற்றில் முக்கியமான தலம் ஸ்ரீரங்கத்தில் உள்ள தன்வந்திரி சந்நிதானம். புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு வந்து தரிசனம் செய்தால் நீண்டகால நோயையெல்லாம் தீர்த்து, ஆரோக்கியத்தை வழங்குவார் தன்வந்திரி பகவான். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புதமான திருத்தலம்தான் ஸ்ரீரங்கம் கோவில். பலப்பல புராணத்தொடர்புகளைக் கொண்டது இந்த ஸ்ரீரங்கம் திருத்தலம்.

தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழியில், அரங்கனுக்கே வைத்தியம் பார்க்கும் வைத்தியனாக, ஸ்ரீமந் நாராயணப் பெருமாள், தன்வந்திரியாக காட்சி தருகிறார். திருக்கரத்தில் அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் முதலானவற்றுடன் காட்சி தருகிறார்.ஸ்ரீரங்கம் திருத்தலத்தில். இவரை வழிபட்டால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் கோவில் - திருச்சி


மேலும் படிக்க... உடல் நலத்தை காத்து, உயிர் வளம் தரும் எமதர்மனின் கோவில்கள்.. 

தமிழகத்தில், தன்வந்திரி பகவானுக்கென்று கோயில்கள் அவ்வளவாக இல்லை. ஆனாலும் பிற்காலத்தில், தன்வந்திரிக்கு சில இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டு, வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம், தன்வந்திரி பகவானை வீட்டிலிருந்தே வழிபடலாம். நோயாளிகள்தான் வழிபடவேண்டும் என்றில்லை. நோயுற்றவர்களுக்காக எவர் வேண்டுமானாலும் வேண்டிக்கொண்டு, தன்வந்திரியை வழிபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஓம் நமோபகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீமஹா விஷ்ணவே நம

என்பது ஸ்ரீதன்வந்திரி பகவான் மந்திரம்

மேலும்படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

இந்த மந்திரத்தை, நோய்வாய்ப்பட்டவர்களுக்காக தினமும் 21 முறை சொல்லுங்கள். நீங்கள் யாருக்காக பிரார்த்தனை செய்தீர்களோ, அவர்களின் தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தன்வந்திரி பகவானே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published: