ஸ்ரீரங்கம் சித்திரைதேர் திருவிழா 5ஆம் நாள்... அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்...
ஸ்ரீரங்கம் சித்திரைதேர் திருவிழா 5ஆம் நாள்... அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்...
Sri Rangam | ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைதேர் திருவிழா 5-ம் திருநாளில் ஸ்ரீநம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Sri Rangam | ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைதேர் திருவிழா 5-ம் திருநாளில் ஸ்ரீநம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா 5-ம் திருநாளில் ஸ்ரீநம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் திருநாள் நேற்று இரவு நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து அணுமந்த வாகனத்தில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளினார்.
அதனைத் தொடர்ந்து சித்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் வாகன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து, பின்னர் அங்கு நம்பெருமாளுக்கு மங்கள ஆரத்தி எனப்படும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நம்பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் கோஷம் இட்டு வழிபட்டனர்.
இந்த சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி திருச்சி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: கதிரவன்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.