• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • தீராத நோய் தீர ஸ்ரீ தன்வந்திரி 108 போற்றியை தினமும் சொல்லுங்க...

தீராத நோய் தீர ஸ்ரீ தன்வந்திரி 108 போற்றியை தினமும் சொல்லுங்க...

 ஸ்ரீ தன்வந்திரி

ஸ்ரீ தன்வந்திரி

நோய்வாய்ப்பட்டவர்களுக்காக தினமும் 21 முறை சொல்லுங்கள். நீங்கள் யாருக்காக பிரார்த்தனை செய்தீர்களோ, அவர்களின் தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

  • Share this:
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றொரு புகழ் மிக்க வாசகம் உண்டு. நோயில்லாத வாழ்க்கையே பூமியின் சொர்க்கம் என்பார்கள். அப்பேர்ப்பட்ட நோய்களை போக்குவதற்கான, நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவும் தெய்வங்கள் உண்டு. ஆலயங்களும் உண்டு. அவற்றில் முக்கியமான தலம் ஸ்ரீரங்கத்தில் உள்ள தன்வந்திரி சந்நிதானம். புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு வந்து தரிசனம் செய்தால் நீண்டகால நோயையெல்லாம் தீர்த்து, ஆரோக்கியத்தை வழங்குவார் தன்வந்திரி பகவான். இவரை தினமும் 108 தன்வந்தரி போற்றியை விளக்கேற்றி பக்தியுடன் பாடினால் சிறப்பு.

    1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
    2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
    3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
    4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
    5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
    6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
    7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
    8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி
    9. ஓம் அமரர் தெய்வமே போற்றி
    10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
    11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி
    12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி
    13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
    14. ஓம் அழிவற்றவரே போற்றி
    15. ஓம் அழகுடையோனே போற்றி

    16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
    17. ஓம் அமைதியின் வடிவே போற்றி
    18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
    19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
    20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
    21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
    22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
    23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி
    24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
    25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
    26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
    27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி
    28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
    29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
    30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி

    தன்வந்திரி


    31. ஓம் உலக ரட்சகரே போற்றி
    32. ஓம் உலக நாதனே போற்றி
    33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி
    34. ஓம் உலகாள்பவரே போற்றி
    35. ஓம் உலகம் காப்பவரே போற்றி
    36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி
    37. ஓம் உயிர் தருபவரே போற்றி
    38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
    39. ஓம் உண்மை சாதுவே போற்றி
    40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
    41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
    42. ஓம் எழிலனே போற்றி
    43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
    44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி
    45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி

    46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
    47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
    48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
    49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
    50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
    51. ஓம் கருணைக் கடலே போற்றி
    52. ஓம் கருணை அமுதமே போற்றி
    53. ஓம் கருணா கரனே போற்றி
    54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
    55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
    56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
    57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
    58. ஓம் குருவே போற்றி
    59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
    60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி

    மேலும் படிக்க...  விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்

    61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
    62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
    63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
    64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
    65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
    66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
    67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
    68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
    69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
    70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
    71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
    72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
    73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
    74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
    75. ஓம் சித்தமருந்தே போற்றி

    மேலும் படிக்க... விநாயகரின் 32 வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி
    77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
    78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி
    79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
    80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
    81. ஓம் தசாவதாரமே போற்றி
    82. ஓம் தீரரே போற்றி
    83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
    84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
    85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி
    86. ஓம் தேவாதி தேவரே போற்றி
    87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
    88. ஓம் தேவாமிர்தமே போற்றி
    89. ஓம் தேனாமிர்தமே போற்றி
    90. ஓம் பகலவனே போற்றி

    மேலும் படிக்க... திருப்பதி கோவில் பற்றி நீங்கள் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள்...

    91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
    92. ஓம் பக்திமயமானவரே போற்றி
    93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
    94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
    95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
    96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
    97. ஓம் புருளஷாத்தமனே போற்றி
    98. ஓம் புவனம் காப்பவரே போற்றி
    99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி
    100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
    101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
    102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
    103. ஓம் மகா பண்டிதரே போற்றி
    104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
    105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி
    106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
    107. ஓம் சக்தி தருபவரே போற்றி
    108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!

    மேலும் படிக்க... திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்பெஷல் நறுமண ஊதுபத்தி.. செப்டம்பர் 13 முதல் விற்பனை...

    ஸ்ரீதன்வந்திரி பகவான் மந்திரம்

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
    சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
    ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ.

    இந்த மந்திரத்தை, நோய்வாய்ப்பட்டவர்களுக்காக தினமும் 21 முறை சொல்லுங்கள். நீங்கள் யாருக்காக பிரார்த்தனை செய்தீர்களோ, அவர்களின் தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தன்வந்திரி பகவானே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது

    மேலும் படிக்க... நீண்டகால நோயை தீர்த்து ஆரோக்கியத்தை தரும் தன்வந்திரி பகவான்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: