வளர்பிறை பஞ்சமியில் வாராஹி தேவியை வழிபாடு செய்தால் நம் துக்கங்கள் போகும் வேதனைகள் மறையும் என்பது ஐதீகம். வரும் சனிக்கிழமை ஜூன் - 4ம் தேதி வளர்பிறை பஞ்சமி. அன்றைய தினத்தில் வாராஹி தேவியை வழிபட்டால் நம்மை பாடாய்ப்படுத்தி எடுக்கும் மன உளைச்சல்கள் விலகும்.
தேவி பாகவதம் உள்ளிட்ட நூல்களில் தேவி மகாத்மியம் பெரிய அளவில் பேசப்படுகிறது. நாம் நமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என்று பேசுகிறோம், அதன் படி நம் மனசாட்சியை காண்கிறோம், அதன் படி நடக்கிறோம், அந்த சக்தி பிரபஞ்ச சக்திதான், அந்தச் சக்திதான் தேவி மகாத்மியம், சாக்தம் என்ற தெய்வ வழிபாட்டு முறை நமக்கு அறிவுறுத்துவதாகும்.
மகாசக்தி என்று பெண் தெய்வத்தைக் கொண்டாடுவதும் இதனால்தான். இந்த மகாசக்தியைத்தான் பல ரூபங்களில் துர்க்கை என்றும், மகமாயி என்றும் மாரியம்மன் என்றும் நீலி, சூலி என்றும் அம்பாள், என்றும் அம்பிகையே, ஈஸ்வரியே என்றும் நாம் மூர்த்திகரணம் செய்து வழிபடுகிறோம், நாம் இந்த ரூபங்களில் வழிபடுவது அந்த மகாசக்தியையே.
இதில் வளர்பிறை பஞ்சமி தினத்தன்று வாராஹி தேவியை வழிபட்டால் பலன் கிட்டும். வாராஹி தேவிக்கு சகஸ்ர நாமங்கள் இருந்தாலும் 12 திருநாமங்கள் விசேஷமாகக் கருதப்படுகிறது. இந்தத் திருநாமங்களை உச்சாடணம் செய்தால், பயம் விலகும் தடைகள் விலகும் என்பது ஐதீகம்.
ஆக்ஞா சக்ரேஸ்வரி, அரிக்னி, சமயசங்கேதா, தண்டநாதேஸ்வரி ஆகிய பெயர்களும் வாராஹி தேவிக்கு உண்டு. நவராத்திரி என்றால் கொலு வைத்து பெண் தெய்வங்களை வழிபடுவது போல, ஆஷாட நவராத்திரியில் கோலங்கள் போட்டு வாராஹி தேவியை வழிபடலாம்.
எனவே வரும் 4ம் தேதி சனிக்கிழமை வாராஹி தேவியை சகஸ்ரநாமம் சொல்லி வழிபட்டால் சிறப்பு, முடியவில்லை எனில் அஷ்டோத்ர நாமாவளி சொல்லி விளக்கேற்றி, பூஜை செய்து வழிபட்டாலும் சிறப்புதான், வேதனைகளும், மனப்பாரங்களும், தடைகளும் விலக வாராஹி தேவியை வழிபடுவோம்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.