Home /News /spiritual /

Mattu Pongal 2022 | மாட்டுப்பொங்கலின் சிறப்புகள்...

Mattu Pongal 2022 | மாட்டுப்பொங்கலின் சிறப்புகள்...

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல்

வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும்.

    பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். அந்த வகையில் நாளை மாடுப் பொங்கல்.  இந்நாளில் கோ பூஜை செய்து மாடுகளை வழிபாடு செய்ய வேண்டும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.  அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாடுகளின் கழுத்தில் பூமாலை கட்டி வழிபடுவது நல்லது.




    உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கலின் அன்று  மனிதனுக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கால்நடைகளை குளிப்பாட்டுவர். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி அலங்காரம் செய்வர்.  அத்துடன் உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள்.

    தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் ஆகிவற்றை தங்கள் கைகளால் விவசாயிகள் ஊட்டி விடுவார்கள். அந்த  பொங்கலை பரங்கி இலை அல்லது வாழை இலையில் வைத்து மாட்டிற்கு பிரசாதமாக வழங்குவது நல்லது.

    மாட்டு பொங்கல் பண்டிகையுடன் சம்பந்தப்பட்ட இன்னுமொரு விஷயம் இருக்கிறது. அதுதான் ‘ஜல்லிக்கட்டு’. இளம் காளையர் காளை மாடுகளை அடக்கும் பாரம்பரிய விளையாட்டு இது. ஜல்லிக்கட்டு பல இடங்களில் நடத்தப்பட்டாலும், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டே உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. அத்துடன் உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.



    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Pongal, Pongal festival

    அடுத்த செய்தி