முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்புகளும் அதன் 18 படிகளும்...

சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்புகளும் அதன் 18 படிகளும்...

சபரிமலை

சபரிமலை

Sabarimala Ayyappan | ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு ‘அஷ்டாபிஷேகம்’ என்று பெயர்.

  • Last Updated :

சபரிமலை அய்யப்பன்‌ கோயில்‌ என்றாலே பக்தர்களின்‌ எண்ணத்தில்‌ தோன்றுவது 18 படிகள்‌ தான்‌. விரதமிருந்து, இருமுடி சுமந்து பக்தர்கள்‌ ஐயனை 18-ம்‌ படி ஏறிச்சென்று தரிசித்தலே மிகவும்‌ சிறப்பானதாகும்‌. சுவாமியை இவ்வாறு தரிசித்தால்‌ தான்‌ ஒரு மண்டலம்‌ விரதமிருந்து கோயில்‌ சென்று வந்ததன்‌ முழுப்‌ பலன்களையும்‌ புண்ணியத்தையும்‌ பெறமுடியும்‌ என்பது ஐதீகம்‌.

இந்த 18 படிகளில்‌ ஒவ்வொரு படியும்‌ ஐயப்பனின்‌ திருநாமங்களால்‌ அழைக்கப்படுகிறது. 

1 - ஆம்‌ படி - குளத்தூர்‌ பாலன்‌

2. - ஆம்‌ படி - ஆரியங்காவு அனந்த ரூபன்‌

3 - ஆம்‌ படி - எரிமேலி ஏழைப்‌ பங்காளன்‌

4 - ஆம்‌ படி - ஐந்துமலைத்‌ தேவன்‌

5 - ஆம்‌ படி - ஐங்கரன்‌ சோதரன்‌

6 - ஆம்‌ படி - கலியுக வரதன்‌

7 - ஆம்‌ படி - கருணாகரத்‌ தேவன்‌

8 - ஆம்‌ படி - சத்யப்பரிபாலகன்‌

9 - ஆம்‌ படி - சற்குண சீலன்‌

10- ஆம்‌ படி - சபரிமலை வாசன்‌

11. ஆம்‌ படி - வீரமணி கண்டன்‌

12 - ஆம்‌ படி - விண்ணவர்‌ தேவன்‌

13 - ஆம்‌ படி - மோகினி பாலன்‌

14 - ஆம்‌ படி - சாந்த சுவரூபன்‌

15 - ஆம்‌ படி - சற்குண நாதன்‌

16- ஆம்‌ படி - நற்குணக்‌ கொழுந்தன்‌

17- ஆம்‌ படி - உள்ளத்தமர்வோன்‌

18 - ஆம்‌ படி - ஸ்ரீ ஐயப்பன்‌

இந்த 18 படிகளுக்கான தத்துவங்களைப்‌ பார்ப்போம்‌.

முதல்‌ ஐந்துபடிகள்‌ மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும்‌; 6 முதல்‌ 13 படிகள்வரை

அஷ்டமா சித்திகளையும்‌; 14, 15, 16 படிகள்‌ மூன்று வித                                   குணங்களையும்‌, 17-ஆவது படி ஞானத்தையும்‌ 18-ஆவது படி அஞ்ஞானத்தையும்‌ குறிக்கின்ற வகையில்‌ அமைந்துள்ளதாக ஐதீகம்‌.

மேலும் படிக்க... கார்த்திகை மாதம் 2021 - விசேஷங்கள், விழாக்கள்

சபரிமலை கோயிலில்‌ அமைந்துள்ள 18 படிகளும்‌ தெய்வாம்சம்‌ நிறைந்தவை.

ஒன்றாம்‌ படியில்‌ - சூரியன்‌

இரண்டாம்‌ படியில்‌ - சிவன்‌

மூன்றாம்‌ படியில்‌ - சந்திரன்‌

நான்காம்‌ படியில்‌ - பராசக்தி

ஐந்தாம்‌ படியில்‌ - செவ்வாய்‌

ஆறாம்‌ படியில்‌ - ஆறுமுகப்‌ பெருமான்‌

ஏழாம்‌ படியில்‌ - புதன்‌

எட்டாம்‌ படியில்‌ - மகாவிஷ்ணு

ஒன்பதாம்‌ படியில்‌ - குரு பகவான்‌

பத்தாம்‌ படியில்‌ - பிரம்மா

பதினோறாம்‌ படியில்‌ - சுக்கிரன்‌

பன்னிரண்டாம்‌ படியில்‌ - திருவரங்கன்‌

பதின்மூன்றாம்‌ படியில்‌ - சனீஸ்வரன்‌

பதினான்காம்‌ படியில்‌ - எமதர்மன்‌

பதினைந்தாம்‌ படியில்‌ - ராகு

பதினாறாம்‌ படியில்‌ - காளி

பதினேழாம்‌ படியில்‌ - கேது

பதினெட்டாம்‌ படியில்‌ - விநாயகர்‌

ஐயப்பன்‌ சுவாமி கொடிய அரக்கியான மகிஷியை வதம்‌ செய்தபோது பயன்படுத்திய ஆயுதங்கள்‌ 18

அவைகள்:

வில்‌, வாள்‌, பரிசை, குந்தம்‌, ஈட்டி, கைவாள்‌, முள்தடி, முசலம்‌, கதை, அங்குசம்‌, பாசம்‌, பிந்திப்பாலம்‌, வேல்‌, கடுநிலை, பாஸம்‌, சக்கரம்‌, பரிகம்‌, சரிகை இந்த 18 வகை ஆயுதங்களும்‌ 18

படிகளாக அமையப்பெற்றன என்பதும்‌ ஒரு ஐதீகம்‌. ஐயப்பனைக்‌ காண கடும்‌ விரதமிருந்து வரும்‌ பக்தர்கள்‌ அனைவரும்‌ புனிதம்‌ நிறைந்த , புண்ணியம்‌ அருள்கின்ற இந்த 18 படிகளில்‌

ஏறிச்சென்று அகிலம்‌ காத்திடும்‌ அய்யப்பப்பெருமானை தரிசித்தலே சாலச்சிறந்ததாகும்‌.

திருகோவில் சிறப்புகள்

1. கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, சபரிமலை ஐயப்பன் திருக்கோவில்.

2. ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு ‘அஷ்டாபிஷேகம்’ என்று பெயர்.

3. சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.

மேலும் படிக்க... கற்பூர காடு, சரணம் சொல்லியே... ஐயப்பன் பாடல்கள் 2021...

4. சிவனின் உடுக்கையை படுக்க வைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப் போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது இத்தல ஐயப்பனின் விசேஷமாகும்.

5. சபரிமலைக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 கோடி பக்தர்கள் வருகை தந்து இறைவனை தரிசித்துச் செல்கின்றனர்.

6. ஐயப்பனுக்கான பாடல்களில் முக்கியமானது, ‘ஹரிவராசனம்.’ இது இரவில் ஐயப்பனை உறங்கச் செய்வதற்காக இசைக்கப்படும் தாலாட்டு.

7. சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து இந்தப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.

8. இந்த ஆலயத்தில் ‘தத்வமஸி’ என்ற சொல் எழுதப்பட்டிருக்கும். இதற்கு ‘நீயும் ஒரு கடவுள்’ என்று பொருள்.

9. ஐயப்பன், மகரசங்கராந்தி அன்று ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த ஜோதியை அப்பாச்சி மேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து தரிசிக்க முடியும்.

10. ஐயப்பன் கோவிலில் மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னிதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக்கூடாது. உருட்டி வழிபட வேண்டும். மஞ்சள் பொடியை அம்பாளுக்கு படைத்து வழிபடுவார்கள்.

11. திருவாங்கூர் தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன் கோவிலை, சுமார் ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்திருக்கிறது.

மேலும் படிக்க... இன்று கார்த்திகை மாத பிறப்பு... விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்...

First published:

Tags: Ayyappa Temple, Sabarimalai