புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். இந்த மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மக்கள் பலரும் விரதம் பூஜை என ஆன்மீக சிந்தனையோடு இருப்பார்கள்.
அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாத்தில்தான் சனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவம் உண்பதை தவிர்த்து விடுவர். காரணம் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் பிணி அதிகமாக வரும். ஆகையால் புரட்டாசி மாதம் சீக்கிரம் ஜீரணம் ஆககூடிய உணவு வகைகளை மட்டுமே உண்ண வேண்டும். இந்த முறை காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புரட்டாசி சனிக்கிழமை விரதம்
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க... மகாளய பட்சம் 2021... வழிபட வேண்டிய முறை..
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
பெருமாளை வழிபடும் முறை
வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வணங்க வேண்டும்....
மேலும் படிக்க... சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள் என்னென்ன?
புரட்டாசி விரதம்: எப்படி இருக்க வேண்டும்? முழு விபரம்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Purattasi