சபரிமலையில் கேரளா உயர் நீதிமன்ற உத்தரவு படி இன்று முதல் குழந்தைகள் முதியவர்களுக்கு தனி வரிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்களுக்காக சிறப்பு வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதினெட்டாம் படிக்கு முன்னதாக நடை பந்தல் பகுதியில் இருந்து தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. 18 படி ஏறும் முன் அவர்கள் ஓய்வெடுக்க நாற்காலிகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்து கீழே இறங்கும் போதும் ஓய்வெடுக்க தனி வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக வந்த புகார்கள் அடிப்படையில் கேரளா உயர் நீதிமன்ற தனி நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவை தொடர்ந்து கேரளா தேவசம் போர்டு அதை நடைமுறை படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதே போல நிலக்கல் - பாம்பை அரசு பேருந்தில் பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் தனியார் வாகனங்களுக்கு
பார்க்கிங் வசதிகளை விரிவுபடுத்தி கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
Also see... 'வாழ்த்துகள்'.. திடீரென மேடையில் ஒலித்த ரஜினி குரல்.. மகிழ்ச்சியில் திகைத்த கர்ப்பிணிகள்!
இன்று 1,4,478 பேர் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்துள்ளனர். நேற்று 6,747 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று அதி காலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதி காலை 4 மணி முதல் மதியம் 1.30 மணிக்கு நடை சாத்தும் வரையிலும் மேலும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
இன்று நடை திறக்கப்பட்டு 34 வது நாள், மண்டல காலம் 33 வது நாளாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.