ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருவள்ளூர்: திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு..!

திருவள்ளூர்: திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு..!

திருநின்றவூர் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

திருநின்றவூர் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

Ambattur | வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ambattur, India

திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் அமைந்துள்ள ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல  பெருமாள் திருக்கோவில் 108 வைணவ திருத்தளத்தில் 58 வது ஆலயமாகும். இங்கு இன்று வைகுண்ட ஏகாதேசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை  5 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன்  தீப ஆராதனை செய்து சொர்க்கவாசல் என்று சொல்லக்கூடிய பரமபத வாசல் வழியே சுவாமி வந்ததும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பக்தி பரவடத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்,

மூலவர் சன்னதிக்கு பிரம்மாண்ட ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை காண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும் அன்னதானமும் கோவில் நிர்வாக சார்பில்  வழங்கப்பட்டது.

செய்தியாளர்: கண்ணியப்பன், அம்பத்தூர்

First published:

Tags: Ambattur Constituency, Vaikunda ekadasi