இன்று புதிய விஷயங்கள் தொடங்க ஏதாவது திட்டமிட்டிருந்தால் அவசரம் காட்டாதீர்கள். உங்களது நலம் விரும்பி ஒருவருடன் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள். உங்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட நேர்ந்தால், மற்ற விஷயங்களை ஒதுக்கி வைத்து விட்டு அதில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சூரியகாந்தி பூ
ரிஷபம்:
நீங்கள் தேடி செல்லாவிட்டாலும் கூட உங்களை தேடி சில புதிய வாய்ப்புகள் அல்லது திட்டங்கள் வர கூடும். இன்று உங்கள் பெரும்பாலான நேரத்தை நீங்கள் அமைதியான இடத்தில் செலவிட விரும்புவீர்கள். பணப்புழக்கம் இயல்பாக இருக்கும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் மெழுகுவர்த்தி
மிதுனம்:
உங்கள் நீண்ட கால நண்பர் அல்லது பழைய அலுவலகத்தில் வேலை பார்த்த சக ஊழியர் உங்களை தேடி முன்னறிவிப்பின்றி வர கூடும். ஒரே நேரத்தில் பல பணிகள் காரணமாக உங்களுக்கு கவனம் சிதறல் ஏற்படலாம். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புத்தர் சிலை
கடகம்:
இன்றைய நாளில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். நீங்கள் இன்று ஒரு நிகழ்வில் பங்கேற்க கூடிய வாய்ப்பு கிடைக்கலாம். நீங்கள் முன்பு முதலீடு செய்த பணம் மூலம் இன்று பலன் பெறுவீர்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கிடார்
சிம்மம்:
இன்று உங்களது வேலையில் சில கடினமான பணிகள் சேர்ந்து உங்கள் ஒட்டுமொத்த அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த கூடும். எனினும் நண்பர்களின் ஆதரவு இன்றைய நாளை உங்களுக்கு எளிதாக மாற்றக்கூடும். முதிர்ச்சியுடன் சில முடிவுகளை எடுக்க நேரிடலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு படர்கொடி
கன்னி:
இன்று உங்களுக்கு சற்று கவலைகள் நிறைந்த நாளாக அமைய கூடும். நீங்கள் எதிர்பாராத சூழ்நிலையில் சில கவலைகளை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களு முன்பே இன்று ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும்என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் அந்த பயணத் திட்டம் தள்ளி போகலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சாவிக்கொத்து
துலாம்:
இன்று நீங்கள் புதிய வாகனம் வாங்குவது பற்றி யோசிக்கலாம். முக்கியமான குடும்ப உறுப்பினரிடமிருந்து வரும் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள். அலுவலக ஊழியர்கள் தங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை காண்பார்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வால் டிஸ்ப்ளே
விருச்சிகம்:
இன்று நீங்கள் பதற்றமுடன் இருப்பீர்கள். சில விஷயங்களுக்கு நிரந்தர தீர்வு என்று எதுவும் இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். வேறொருவரைக் கேள்வி கேட்கும் முன் உங்கள் வார்த்தைகளை நீங்கள் கவனமுடன் பயன்படுத்துங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கருப்பு டைரி
தனுசு:
இன்று நீங்கள் பண விஷயங்களில் லேசான இடையூறுகளை சந்திக்கலாம். உங்கள் பிள்ளைக்கு உங்களது அவசர உதவி தேவைப்படலாம். உங்கள் வசம் இவ்வளவு நாள் இருந்து வரும் சொத்தை இனி பராமரிப்பது கடினம் என்று உங்களுக்கு தோன்றக்கூடும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ப்ளூ கிரிஸ்டல்
மகரம்:
இன்று வெளியே செல்வதில் நீங்கள் ஆர்வம் காட்டாவிட்டாலும் பொழுதுபோக்கிற்காக நீங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டியிருக்கும். மன அமைதி இல்லாமல் இருப்பீர்கள். எனவே தியானம், இசை போன்றவற்றை முயற்சித்து அமைதி காணலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு டீ கப்
கும்பம்:
இன்று நீங்கள் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஷாப்பிங்கில் ஈடுபடலாம். உங்களிடம் இன்று உற்சாகம் காணப்படும். அது இன்றைய நாளை மகிழ்ச்சியாக்க உதவும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செஸ் போர்டு
மீனம்:
பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையை கடைபிடிப்பது நாளை சுமுகமாக வழிநடத்தும். நீங்கள் நெருக்கமானவர் என்று கருதிய ஒருவர் உங்களை இன்று புறக்கணிக்க கூடும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - லிமிட்டட் எடிஷன்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.