Home /News /spiritual /

Christmas Eve | கிறிஸ்துமஸ் ஈவ் பற்றி சில தகவல்கள்..

Christmas Eve | கிறிஸ்துமஸ் ஈவ் பற்றி சில தகவல்கள்..

christmas eve 2021 : சாண்டா கிளாஸ் பரிசுகளை மட்டுமே வழங்குபவர் அல்ல, அவர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை எடுத்துரைக்கும் நபர்.

christmas eve 2021 : சாண்டா கிளாஸ் பரிசுகளை மட்டுமே வழங்குபவர் அல்ல, அவர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை எடுத்துரைக்கும் நபர்.

christmas eve 2021 : சாண்டா கிளாஸ் பரிசுகளை மட்டுமே வழங்குபவர் அல்ல, அவர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை எடுத்துரைக்கும் நபர்.

    கிறிஸ்துமஸ் ஈவ் (Christmas Eve) என்பது கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் அல்லது இயேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று குறிப்பிடப்படுகிறது. இன்று (டிச.24), உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை பரிமாறிக்கொள்வார்கள். மேலும் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் வண்ண விளக்குகள், குடில், கிறிஸ்துமஸ் மரங்கள் ஆகியவற்றை வைத்து அலங்கரிப்பர். ஆனால் கிறிஸ்துமஸ் ஈவ் குறிப்பிடத்தக்க மத முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

    கிறிஸ்துமஸ் ஈவ் என்றால் என்ன?

    கிறிஸ்துமஸ் என்பது அரவணைப்பு மற்றும் ஒற்றுமையின் கொண்டாட்டம். கிறிஸ்மஸ் ஈவ் என்பது கிறிஸ்மஸுக்கு முந்தைய நாள், எல்லோரும் பண்டிகையை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கும் தருணம். கிறிஸ்மஸைக் கொண்டாட மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது சந்தோஷங்களை பரிமாரிக்கொள்ளும் செயல்களில் ஈடுபடும் நேரமாகும்.

    கிறிஸ்துமஸ் ஈவ் கொண்டாடப்படும் தேதி:

    கிறிஸ்மஸ் ஈவ் கிரிகோரியன் நாட்காட்டியின் படி டிசம்பர் 24 அன்று கொண்டாடப்படுகிறது. இது அட்வென்ட் பருவத்தின் உச்சத்தை குறிக்கிறது. கத்தோலிக்க திருச்சபையின் கூற்றுப்படி, அட்வென்ட் என்பது கிறிஸ்மஸுக்கு முந்தைய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளின் ஒரு தொகுப்பு ஆகும். அட்வென்ட் என்பது லத்தீன் வார்த்தையான அட்வெனியோவிலிருந்து பெறப்பட்டது.

    கிறிஸ்துமஸ் ஈவ் முக்கியத்துவம்:

    உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கான பரிசுகளை வழங்க சாண்டா கிளாஸ் வட துருவத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும் நாள் தான் கிறிஸ்துமஸ் ஈவ் என்று நம்பப்படுகிறது. குழந்தைகள் தங்கள் வீட்டில் சாண்டா பரிசுகளை விட்டு செல்வார் என்றும், அவருக்காக குழந்தைகள் வைக்கும் பால் மற்றும் குக்கீகளை சாப்பிட்டு செல்வார் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு நம்பிக்கையாகவே கடைபிடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்  கிறிஸ்துமஸ் ஈவ் நள்ளிரவில், மிட்நைட் மாஸ் ஏற்பாடு செய்யப்படும்.

    மேலும் படிக்க... Christmas | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக் செய்ய ரெசிபி!

    அந்த வகையில் கிறிஸ்துமஸ் ஈவ் கொண்டாட்டத்தின் போது மக்கள் தேவாலயங்களுக்கு செல்வார்கள். வீடுகளை ஒளிரச் செய்வார்கள். மெழுகுவர்த்திகளுடன் பிரார்த்தனை செய்வார்கள். கிட்டத்தட்ட எல்லா தேவாலயங்களிலும் இசை ஒலிக்கும். இவை கிறிஸ்மஸிற்கான மாஸ் முன் பயிற்சி அமர்வுகளாக செயல்படுகின்றன.

    மேலும் படிக்க... Christmas | திராட்சை ஒயின் வீட்டிலேயே செய்வது எப்படி?

    மேலும் ஈவ் அன்று கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டு, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக பரிசுகளை மரத்தின் அடியில் வைப்பார்கள். பல ஐரோப்பிய நாடுகள் 24ம் தேதியே கிறிஸ்துமஸைக் கொண்டாடுகின்றனர். ஏனெனில் அன்று சாண்டா கிளாஸ் பூமியின் மேல் பறந்து செல்வார் என்பதற்காக. மேலும், ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் டிசம்பர் 24ம் தேதி பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

    மேலும் படிக்க... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபி!

    கி.பி.240களில் மார்ச் 28ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் நிகழ்ந்ததாக அக்கால கிறிஸ்தவ நாள்காட்டி குறிப்பிடுகிறது. பிறகு, டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் கி.பி.336ஆம் ஆண்டு ரோம் நகரில் தோன்றியதாம். இந்த தேதிக்கு, போப் முதலாம் ஜூலியஸ் அங்கீகாரம் வழங்கினார். கிறிஸ்துமஸ் கேரல் கீதங்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் ஆலயங்களிலும், 13ம் நூற்றாண்டு முதல் தெருக்களிலும் பாடப்படுகின்றன. கிறிஸ்துமஸ் விழாவின்போது, இயேசு பிறந்த காட்சியை குடிலாக அமைக்கும் வழக்கத்தை, அசிசி புனித பிரான்சிஸ் 1223ம் ஆண்டு தொடங்கி வைத்தார் என்று கூறப்படுகிறது.

    மேலும் படிக்க... கிருஸ்மஸ்க்கு இந்த 5 வகையான கேக்குகளை செய்து பாருங்கள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Christmas

    அடுத்த செய்தி