ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திங்கள்கிழமை சிவனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்...

திங்கள்கிழமை சிவனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்...

சிவன்

சிவன்

Lord Sivan Worship | 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து வணங்கினால் மன கஷ்டங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும்..

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும் என்பது நம்பிக்கை.

  விரதம் இருக்கும் முறை

  சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் விரத்த்தை துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை உண்ணாமல் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும்.

  அன்றைய நாளில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம்.

  சிவனை பூஜிக்க வில்வ இலைகள் கிடைக்காதவர்கள் தோஷம் போக்கும் செவ்வரளி மலர்கள், சங்கு பூக்கள் அல்லது உங்கள் வீட்டில் பூக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் எதுவாயினும் அர்ச்சனை செய்ய பயன்படுத்தலாம். இது எளிமையான விரதமாக இருந்தாலும் கிடைக்கும் பலன்கள் அதிசயிக்கும் வண்ணம் பெரிதாகவே இருக்கும்.

  நைவேத்தியம் படைக்க

  நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் சிவபார்வதிக்கு படைக்கலாம். அன்றைய தினம் காலை முதல் மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் சொல்லி வர வேண்டும். பின்னர் மாலையில் விளக்கேற்றி தூப, தீப ஆரத்தி காண்பித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

  Also see... பிரம்ம முகூர்த்த வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

  இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் உங்களுடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். இந்த விரதத்தை நீங்கள் முடிப்பதற்குள் கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும், அன்னோன்யம் அதிகரிக்கும்.

  பலன்கள்

  மனபிரச்னையால் பிரிந்த கணவன் மனைவி, உற்றார் உறவினர் ஒன்று சேர்ந்து வாழ சிவனுக்கு சோம வாரப் பூஜை செய்து வந்தால் விரைவில் ஒன்று சேர்வர். சோமனான சந்திர பகவான் இவ்விரத்தை பின்பற்றி நற்கதி பெற்ற விரதமாயின் இது சோமவார விரதம் என்றழைக்கப்படுகிறது.

  Also see... திருமணமாகாத ஆண்களுக்கு உடனே பெண் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்...

  சிவபெருமானுக்கு இருக்கும் விரதங்களில் மகத்துவம் வாய்ந்த விரதமானது இந்த சோமவார விரதம். இவ்விரதத்தை பெரும்பாலானோர் கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் எல்லா திங்கள் கிழமைகளிலும் இந்த விரதம் இருக்கலாம். அப்படி இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை மனைவி பெறலாம் என்பது நம்பிக்கை.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Sivan