Home /News /spiritual /

Solar Eclipse 2022: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

Solar Eclipse 2022: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

Solar Eclipse 2022 | சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட உள்ளது. இது பகுதி சூரிய கிரகணம் எனவும் 'கருப்பு நிலவு' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பகுதி சூரிய கிரகணத்தின் போது , கருப்பு நிலவு ( black Moon ) சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பு நடக்க இருக்கிறது.

2022 சூரிய கிரகணத்தின் போது, ​​சூரியனின் வட்டில் 64% பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரனால் தடுக்கப்படும். சந்திரன், சூரியன் மற்றும் பூமி ஆகியவை சரியான கோட்டில் சீரமைக்கப்படாமல் சூரிய கிரகணம் பகுதி பகுதியாக இருக்கும் என நாசா கூறுகிறது.. மேலும் இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் உலகின் சில பகுதிகளில் தெரியும் எனவும்  அறிவித்துள்ளது.

சூரியனும் சந்திரனும் ஒரு நேர்கோட்டில் சரியாக சீரமைக்கப்படாதபோது பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனால் சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காது. அதனால் இந்த பகுதி சூரிய  கிரகணம் சூரியனை யாரோ கடித்தது போல் பிறை போல தோன்றும்.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணங்களில் 4 வகைகள் உள்ளன. அவை மொத்த, வளைய, பகுதி மற்றும் கலப்பினம் ஆகும். இதில் ஒவ்வொன்றும் உலகின் ஒவ்வொரு பகுதிகளில் மட்டுமே தெரியும்.

Also Read...அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்!



சூரிய கிரகணம் 2022

நேரம்:  பகுதி சூரிய கிரகணம் 2022 நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.07 மணிக்கு முடிவடையும்.

சூரிய கிரகணம் 2022 இந்தியாவில் தென்படுமா?

இந்த கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நிகழ்வதால் இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.

2022 இன் முதல் சூரிய கிரகணம் எங்கு தெரியும்?

அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்த ஆண்டுக்கான 2-வது சூரிய கிரகணம் வருகிற அக்டோபர் மாதம் 25-ந்தேதி நிகழ்கிறது. இதுவும் பகுதி சூரிய கிரகணம் என்பதால் இந்தியாவில் பார்க்க முடியாது.

சூரிய கிரகணம் 2022 எப்படி பார்ப்பது?

நாசாவின் சமூக ஊடக சேனல்கள் மூலம் 2022ஆம் ஆண்டின் சூரிய கிரகணம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அரிவிக்கப்பட்டுள்ளது.



கருப்பு நிலவு என்றால் என்ன? ( Black Moon )

பிளாக் மூன் என்பது ஒரு அரிதான நிகழ்வாகும், இந்த நிகழ்வு 2021 இல் தெரிந்தது. பிளாக் மூன் என்பதற்கு எந்த ஒரு வரையறையும் இல்லை, இருப்பினும், இந்தச் சொல் பொதுவாக அமாவாசையுடன் தொடர்புடைய எந்த நிகழ்வுகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Solar eclipse

அடுத்த செய்தி