பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் தேதி 2021 நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமாவாசை அன்று அதாவது மார்கழி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ திதியில் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.
நவம்பர் 19 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அடுத்து வரக்கூடிய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழ்வது வழக்கமாகும். அதன்படி சரியாக 15 நாட்களுக்குப் பிறகு சூரிய கிரகணம் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய கிரகணம் நிகழும் நேரம் :
டிசம்பர் 4ஆம் தேதி 2021 சனிக்கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3.07 மணி வரை நீடிக்கும். 4 மணி நேரம் 8 நிமிடங்கள் வரஒ நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் அண்டார்டிக்கா உள்ளிட்ட பகுதிகளில் தெரியும் என்றும் இதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழ்வதால் இந்தியாவில் காண முடியாது. ஆனால் டிசம்பர் 4ஆம் தேதி கிரகணத்தை இணையத்தில் நேரடியாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... Lunar Eclipse | நவ. 19-ல் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் - தமிழ்நாட்டில் பார்க்க முடியுமா?
சூரியனுடன் ஒப்பிடும் போது நிலவின் அளவு மிகவும் சிறியது என்பதால், நிலவால் சூரியனை மறைக்க முடியாது. எனவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது, நிலவை சூரியன் மறைத்திருப்பதால் பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல சூரியன் தோற்றமளிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Solar eclipse