ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

WATCH - பக்தி பரவசம்.. சபரிமலைக்கு ஐயப்பனை காண படையெடுக்கும் குட்டீஸ்!

WATCH - பக்தி பரவசம்.. சபரிமலைக்கு ஐயப்பனை காண படையெடுக்கும் குட்டீஸ்!

சபரிமலையில் குட்டீஸ்

சபரிமலையில் குட்டீஸ்

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களில், கருப்பாடை, துளசி மாலை, சரண கோஷம் என சிறுவர், சிறுமியர் தனித்து தெரிவர்.  குட்டீஸ் ஐயப்பன்மார்கள் மற்றும் குழந்தை மாளிகைப்புரங்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்து வருகின்றன. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலையில் கண்களை கவரும் மிகவும் அழகான காட்சி குழந்தை அய்யப்பன்களும் குழந்தை மாளிகைப்புறன்ங்களும். பெரும்பாலான குழுக்களில் குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது சபரிமலைக்கு வருவதை பார்க்க முடியும். அப்பா, தாத்தா போன்ற முதியவர்களின் கையை பிடித்து கொண்டும் , தனித்தனியாகவும் நடந்து வரும் காட்சிகள் எங்கும் பார்க்க முடியும்..

பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பயணம் மற்றும் தரிசனம் எப்படி இருந்தது என்பதை மழலை மொழியில் அவர்களே விளக்கம் தருகின்றனர். சிறுவர்களை கன்னி ஐயப்பன் என்றும் சிறுமிகளை மாளிகைப்புறம்  என்றும் ஐதீக முறையில்  அழைக்கப்படுவார்கள்.

குறிப்பாக பெண் குழந்தைகளை 10 வயது வரை மட்டும் தான் சபரிமலைக்கு அழைத்து செல்ல முடியும் என்பது ஐதீகம்.

அதனால் பெரும்பாலானோர்  தங்களது பெண் குழந்தைகளை அந்த வயதை எட்டும் முன்னே சபரிமலைக்கு அழைத்து செல்வார்கள்.

சபரிமலைக்கு வந்து அய்யப்ப சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இருக்கின்றது என்பதை இவர்களோடு பேசும்போது நமக்கு தெரிய வரும். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு குழந்தைகளும் அப்பாவுடன் மாலை அணிவித்து விரதம் இருந்து காத்திருந்து இங்கு வருகின்றனர். குடும்பத்துடன் வெளியே செல்வது போலவோ அல்லது பள்ளியிலிருந்து ஒரு சுற்றுலா பயணம் செல்வது  போன்றது அல்ல இந்த பயணம்.

Also see... சபரிமலை : நீலி என்ற பெண் புனித பம்பா நதியாக மாறிய புராண வரலாறு!

சிறு வயதில் சபரிமலை குறித்து பல்வேறு கற்பனைகள் குழந்தை உள்ளங்களில் இருக்கும். ஆனால் இங்கு வரும் போது அவர்கள் அதன் பொருளை முழுமையாக உணர்கின்றனர். தொலை தூரத்தில் இருந்து பயணம் செய்யும் இதுபோன்ற கன்னி ஐயப்பன்மார்களுக்கு பல்வேறு அனுபவங்கள் இந்த பயணம் மூலம் கிடைக்கும் என்பது உண்மை..

சுற்றிலும் கண்கொள்ளாக் காட்சிகளான எருமேலி... பம்பை என சபரிமலையை நெருங்க நெருங்க அவர்களின் எதிர்பார்ப்பும் காற்பனையும் அதிகரித்து கொண்டே இருக்கும்..

கடைசியில்   பயணம் செய்து பயணம் செய்து  பம்பையை சென்றடையும். தொடர்ந்து பம்பை ஆற்றில் தங்கள் தந்தை அல்லது முதியோர் சாமிகளின் பாதுகாப்பில் புனித நீராடல், அதனை தொடர்ந்து மலை ஏறுதல். அடியெடுத்து அடியெடுத்து வைத்து செங்குத்தாக உள்ள கரிமலை, நீலிமலை ஏற்றம் ஏறும் போது பிஞ்சு கால்களில்  வலி ஏற்படும்.

' isDesktop="true" id="842744" youtubeid="qqNoPcB27Sw" category="spiritual">

பெரிய சாமிகளுக்கும் கூட வலி இருக்கும். ஆனால், இன்னும் சிறிது தூரம் சென்றால் அய்யப்பனை தரிசித்துவிடுவேன்  என்று நினைத்து நினைத்து குட்டி சாமிகளுக்கும் , குழந்தை மாளிகைப்புறங்களும் வலியால் துடித்து போனாலும் ஐயப்பனை பார்க்க போகிறோம் என்ற எண்ணத்தில் வலியெல்லாம் மறந்து கடைசியில் சன்னிதானம் சென்றடைவார்கள்.

இந்த குட்டீஸ் சாமிகளுக்கு அடுத்த சவால் என்னவென்றால் கூட்ட நெரிசலில் வரிசையில் நின்று, பதினெட்டாம் படி ஏறி, மீண்டும் வரிசையில் நின்று... இறுதியாக அய்யப்பனைக் கண்கள் நிறைந்து பார்த்து வணங்கி தங்கள் கற்பனைக்கும் காத்திருப்புக்கும் முடிவு கட்டி மகிழ்ச்சியடைகின்றனர்.

Also see... இனி தடை இல்லை.. சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

இங்கு வரும் ஒவ்வொரு குழந்தையின் கதையும் இதுதான். இது போன்று ஆண்டு தோறும் இங்கு லட்சக்கணக்கான குழந்தை ஐயப்பன்மார்களும் , குழந்தை மாளிகைப்புறங்களும் தரிசனம் செய்து செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு மொழிகள் பேசும் குழந்தைகளுக்கு இந்த சன்னிதானத்தில் ஒரே மொழி ஒரே பார்வை மட்டுமே, சுவாமியே சரணம் ஐயப்பா... என்ற மொழியும் குழந்தை ஐயப்பன், குழந்தை மாளிகைப்புறம் என்ற பார்வையும் மட்டும்தான்.

இங்கு வரும் எல்லா குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் இந்த புது அனுபவங்கள் மூலமாக கிடைக்கும் மகிழ்ச்சியில் இதே போல் அடுத்த ஆண்டும் ஐயனை தரிசிக்க வரவேண்டும் என்ற ஆசையோடும் மன நிறைவோடும் திரும்பி செல்கின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Sabarimalai, Sabarimalai Ayyappan temple