• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருமணம் கைகூட தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்...

திருமணம் கைகூட தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்...

திருமணம்

திருமணம்

இந்த 2 ஸ்லோகங்களில் ஏதேனும் ஒன்றை சொல்லி வந்தாலே நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்...

  • Share this:
    தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் திருமணமாக வேண்டிய ஆண்களும் பெண்களும் இத்துதியை பாராயணம் செய்தால், வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். மங்களங்கள் பெருகும் என்பது ஐதீகம்...

    திருமணம் கைகூட தினமும் சொல்ல வேண்டிய வராஹ மூர்த்தியின்  ஸ்லோகம்

    ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ
    ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா
    ஸௌவர்ணாலய மண்டிதோ
    விதிமுகைர்பர்ஹிர்முகை: ஸேவித:
    ய: சத்ரூன் ஹனயன்னிஜானவதி
    ச ஸ்ரீபூவராஹாத்மக:
    ஸ்ரீமத் வேங்கட பூதேந்த்ரரமண:
    குர்யாத்தரிர் மங்களம்.

    இந்த ஸ்லோகத்தின் விளாக்கம்: ”திருப்பதி-திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ்கரணி என்னும் குளத்தின் கரையில் வீற்றிருக்கிறார் வராஹமூர்த்தி. மஹாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் இவர். தங்கமயமான கோயிலை அலங்கரித்துக் கொண்டிருப்பவரும், பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுகிறவரும், பகைவர்களிடமிருந்து கைதூக்கி விடுபவரும், யக்ஞவராஹமூர்த்தியாய் விளங்குபவருமான, வெங்கடாஜலபதிக்கு இடமளித்த திருமாலான வராஹர் எனக்கு எல்லா மங்களங்களையும் அருளுமாறு வேண்டிக்கொள்கிறேன் ” என்று அர்த்தம்.

    மேலும் படிக்க...வீடு தேடி நன்மைகள் வரச்செய்யும் விநாயகர் ஸ்லோகங்கள்

    தடைகள் நீங்கி அனைத்து காரியங்களும் சித்தி பெற இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்..                                   

    சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைக்குரிய சந்திரன் ஸ்லோகம்

    திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்காகவே சுயம்வர மந்திரம் என்ற ஸ்லோகம் ஒன்று உள்ளது. நல்ல, குணமுள்ள வாழ்க்கைத் துணை அமைய ஆண், பெண் என இருவரும் இந்த மந்திரத்தைச் சொல்லலாம்.

    ஓம் ஹ்ரீம் யோகினி யோகினீ

    யோகேஸ்வரி யோகேஸ்வரி

    யோக பயங்கரீ யோக பயங்கரீ

    ஓம் ஹ்ரீம் யோகினி யோகினீ

    யோகேஸ்வரி யோகேஸ்வரி

    யோக பயங்கரீ யோக பயங்கரீ

    தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து 18 முறை இந்த மந்திரத்தைச் சொல்லி வர வேண்டும். தொடர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் திருமண பாக்கியம் விரைவில் கைகூடும். பெண்கள் சிவன் – பார்வதி படத்துக்கு மஞ்சள் அல்லது சிவப்பு நிற மலர்களால் ஆன மாலையை அணிவித்து, விளக்கேற்றி இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும். ஆண்கள் துர்கையம்மன் படத்துக்கு செந்நிற மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி இந்த மந்திரத்தை சொல்லி வர வேண்டும்.

    இந்த 2 ஸ்லோகங்களில் ஏதேனும் ஒன்றை சொல்லி வந்தாலே நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: