முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருவள்ளூர் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம்-நந்தி சிலை கண்டெடுப்பு...

திருவள்ளூர் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம்-நந்தி சிலை கண்டெடுப்பு...

ஆத்துப்பாக்கம் ஊராட்சி ஈஸ்வரன்மேடு பகுதியில் மண்ணுக்கு அடியில் பழமை வாய்ந்த சிவலிங்கம்-நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த ஈஸ்வரன்மேடு பகுதியில் விவசாயி அண்ணாமலை என்பவரது நிலத்துக்கு அருகே உள்ள தரிசு நிலத்தை ஜே.சி.பி இயந்திரம் மூலம் சிலர் சுத்தம் செய்தனர். அப்போது மண்ணுக்கு அடியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை ஆகியவற்றை கண்டெடுத்தனர்.

இந்தச் செய்தி அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. இதனால் கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து சுவாமி சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

மேலும் படிக்க... தெய்வங்களுக்கு தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா?

சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி குணசீலன், உதவியாளர் அருள் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சந்திரபிரகாஷ் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Sivan, Thiruvallur