மகா சிவராத்திரி இந்த ஆண்டு வருகின்ற பிப்ரவரி மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனால் இந்து அறநிலையத்து துறை சார்பில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், கோவை பேரூர் பட்டீஸ்வரர், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்களில், மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட உள்ளது.
அதற்காக கோவில் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள, இந்த 5 கோவில்களுக்கும் தலா மூன்று சிறப்பு அலுவலர்கள் இடம்பெற்ற கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் அந்தஸ்து அதிகாரிகள் உள்ளனர்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள் பிப்ரவரி 17, 18ம் தேதி, இந்த கோவிலுக்கு சென்று, சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு. அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சிவராத்திரி விழாவை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு மதிப்பெண்கள் வழங்க, ஒவ்வொரு கோவிலுக்கும் மூன்று அலுவலர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்குழுவினர், பிப்ரவரி 18ம் தேதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவில்களுக்கு சென்று, விழாவை கவனித்து, மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அந்த அறிக்கையை, கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maha Shivaratri