சாய்பாபா பிறப்பிட சர்ச்சை... ஷீரடி கோவில் மூடப்படாது என்று நிர்வாகம் விளக்கம்...!

Shirdi Saibaba Temple |

சாய்பாபா பிறப்பிட சர்ச்சை... ஷீரடி கோவில் மூடப்படாது என்று நிர்வாகம் விளக்கம்...!
ஷீரடி சாய்பாபா
  • News18
  • Last Updated: January 18, 2020, 4:23 PM IST
  • Share this:
சாய்பாபா பிறந்த இடம் குறித்து தொடர்ந்து விவாதம் ஏற்பட்டு வரும் நிலையில், நாளை முதல் காலவரையறையின்றி ஷீரடி கோயில் மூடப்படும் என்ற தகவலை நிர்வாகம் மறுத்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ஷீரடி என்ற இடத்தில் சாய்பாபாவுக்கு மிகப்பெரியா கோயில் இருக்கிறது. உலகின் பல பகுதிகளில் இருந்தும், மக்கள் இங்கு வந்து சாய்பாபாவை வணங்கிச் செல்வார்கள். பிரபல ஆன்மீக சுற்றுலாத் தளமாகவும் இந்த இடம் இருந்து வருகிறது.

ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு சமீபத்தில் இங்கு விமான நிலையத்தை அமைத்தது. சாய்பாபா பக்தர்கள் தங்களது வாழ்நாளில் சென்றுவிடவேண்டும் என்று இருக்கக் கூடிய ஷீரடி கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படும் என்று தகவல்கள் பரவியது.


சாய்பாபா பிறந்த இடம் குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை கிடைத்தது இல்லை. எனினும், ஷீரடியில் சாய்பாபா அதிக நாட்கள் வாழ்ந்தார் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் அவர் அங்குதான் பிறந்தார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.

சாய்பாபா பிறந்த ஊர் தொடர்பாக நீண்ட காலமாக சர்ச்சை இருந்து வரும் நிலையில் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பத்ரியில் இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும், அங்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார்.

பத்ரியில் ஒருவேளை சாய்பாபா கோவில் அமைந்துவிட்டால், ஷீரடிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும் நிலை இருக்கிறது. இந்த நிலையில், ஜனவரி 19-ம் தேதி (நாளை) முதல் சாய்பாபா கோயில் மூடப்படும் என்று தகவல்கள் பரவியது. மேலும், ஷீரடியில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுகப்பட்டுள்ளது.இந்த நிலையில், கோவில் மூடப்படும் என்ற தகவல் பொய்யானது என்று நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
First published: January 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading