முதல் பிறை தெரிந்ததால் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாட்டம்!

இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும்  ஜூன் 5-ம்தேதி  புதன்கிழமை ரம்ஜான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பிறை தெரிந்ததால் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாட்டம்!
இன்று பக்ரீத் பண்டிகை
  • News18
  • Last Updated: June 4, 2019, 4:53 PM IST
  • Share this:
வானில் முதல் பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் கொண்டாடப்படுகிறது.

ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை வளைகுடா நாடுகளை தொடர்ந்து இன்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

மேலும் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரமலான் நோன்பு மாதத்தின் கடைசி நாளாக செவ்வாய்க்கிழமை இன்று இருக்கும். புதன் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல் பிறை தோன்றுவதற்கு ஏற்ப அந்நாடுகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும்  ஜூன் 5-ம்தேதி  புதன்கிழமை ரம்ஜான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நேற்று பிறை தெரிந்ததால் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... பைனான்சியர் கொலையில் திருப்பம்... மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு: மனைவியே கூலிப்படை வைத்து கொன்றது அம்பலம்

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see....
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading